"சக்கரங்கள்' என்றால் என்ன?
நமது உடல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம், இயக்க நீர்களின் சுரப்பு, புதிய திசுக்கள் உருவாகுதல், கழிவுப் பொருட்களைப் பிரித்து வெளியேற்றுதல் போன்ற பல செயல்பாடுகள் நாம் தூங்கும்போதுகூட தொடர்ந்து நடைபெறுகின்றனநமது உடலினுள் ஒரு நிமிடத்தில் 1,62,000 வேதியியல் மாற்றங்கள் நடைபெறுவதாக நவீன விஞ்ஞானம் கணக்கிட்டுள்ளது.
எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், வேதியியல் மாற்றமாக இருந்தாலும், அது நடைபெற சக்தி அவசியம். உடலின் உள்ளேயிருந்து அதை இயக்கும் சக்தியையே "உயிர் சக்தி' என்கிறோம்.
இந்த உயிர் சக்தியை தந்திர யோகம் "பிராணா' என்று அழைக்கிறது. பிராணன் உடலில் இருக்கும்வரைதான் இயக்கங்கள் நடைபெறும். பிராணன் உடலைவிட்டுப் பிரிந்துபோனால் மரணம் நிகழுகிறது.
பிராணனை (உயிர் சக்தியை) உருவாக்கும் சக்தி மையங்களே நமது சக்கரங்களாகும். மின்சாரம் எனும் சக்தி மின் நிலையங்களில் உருவாக்கப்படுவது போன்று, நமது உடலுக்குத் தேவையான, உடலை இயக்கும் உயிர்சக்தியானது
நமது சக்கரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.