பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா
அன்னை வராகி நமக்கு அருள் வழங்கும் முகமாக கடந்த 1988ம் ஆண்டு பங்குனி மாதம் எம்மண்ணில் அவதரித்தாள்.
பதினைந்து மாதங்கள் வேப்பமரத்தின் கீழ் அடியார்களுக்கு அருள் வழங்கிய அன்னைக்கு கடந்த 1989ம் ஆண்டு ஆனி மாதம் மிகவும் சிறிய கோவில் ஒன்று கட்டப்பட்டது.
அதன் பின் அன்னையின் அடியார்களின் உதவியால் பெரிதாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் அன்னையை எங்களுக்காக உருவாக்கித்தந்த பெருமை காலஞ்சென்ற திரு செல்லத்துரைஐயா அவர்களையே சாரும்.
அடியார்களுக்கு அருள்வாக்கு கூறும் அன்னைக்கு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
அது தவிர ஒவ்வொரு ஆண்டும் பங்குனித்திங்களிலும் ஆனி உத்தரத்திலும் அன்னைக்கு விழா எடுப்பது வழக்கம்.
அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து மனிதகுலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள்
மனதின் சுய நிலையான சுத்த நிலையே
மூலமான வஜ்ர வராகி . அவள் எம்முள்ளே உறைகிறாள், எங்கும் தேடவேண்டாம், வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது. மனதின் உண்மை நிலையானது, எல்லாக் கற்பித்தல்களையும் கழிப்பது அதுவே மிக உயரிய சித்தி '
வராகியை சப்தமாதர்களில் ஒருத்தியாகவும் காணலாம்.
ஸ்ரீலலிதாம்பிகையின் தளபதியாகவும் காணலாம். அவளை தண்டநாதா என்றும் தண்டினீ என்றும் குறிப்பிடுவார்கள். அவளுடைய பரிவாரங்கள் அனேகர். அஸ்வாருடா போன்ற பலர். தண்டநாதாவை மஹாவாராஹி என்றும் சொல்வதுண்டு. மஹாவாராஹி தன்னுடைய அம்சத்தை இன்னொரு வடிவமாகவும் காட்டுவாள். திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரியாக விளங்கிக்கொண்டிருக்கிறாள். அதுபோலவே பாலையை தேவசேனாவாகவும் வாராஹியை வள்ளியாகவும் காண்கிறார் ஒரு சித்தர் வராகி வரம் தரும் தெய்வமாகவும் விளங்குபவள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வராகி வழிபடப் பட்டிருக்கிறாள் வராகியில் பல வடிவங்கள் உண்டு. இரண்டு கைகள், நான்கு கைகள், எட்டுக்கை, பதினாறு கை என்று விளங்கும். எத்தனை கைகளில் எத்தனை ஆயுதம் ஏந்தியிருந்தாலும் அவளுடைய மூலமான முக்கிய கருவிகள் உலக்கையும் கலப்பையும்தான். வராகியில் பலவகைகள் உண்டு. ஸ்வப்ன வராகி போன்றவர்கள்
பரிவார தேவதைகளும் உண்டு. அந்தினீ, ருந்தினீ,ஜம்பினீ,ஜ்ரும்பினினீ, மோஹினி என்று பலர் இருக்கிறார்கள்.
பகளாமுகி போன்ற தெய்வங்களும் வராகி சம்பந்தப்பட்டவர்கள்தாம்.
அ) வராகம்: பன்றியின் முகம், மனித உடல்; வலது புறத்தில் கதாயுதம் மற்ற ஆயுதங்கள்; இடப்புறம் லக்ஷ்மி, சங்கம், தாமரைமலர், லக்ஷ்மி முழங்கையில் அமர்ந்-திருக்க வேண்டும். பூமியும் அதனைத் தாங்கும் அனந்தாழ்வாரும் மூலத்தருகே இருக்க வேண்டும்.
ஆ) வராக உருவத்தை அமைப்பதில் இரண்டாம் வகை: நான்கு கைகளில் ஒன்றில் வாசுகியைப் பற்றியிருத்தல்; இடக்கையினால் பூமியைத் தூக்கி இருத்தல்; காலடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்; வலப்புறம் சக்கரம், வாள், தண்டம், அங்குசம், இடப்புறம் சிங்கம், தாமரை மலர்; கதை, பாசம் வலப்புறத்தில் கருடனது தோற்றம்; விசுவரூபத்துக்கு நான்கு முகங்கள் இருபது கைகள் அமைக்கப்பட வேண்டும்.
மதுரை அரசாளும் மீனாட் க்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாட் க்ஷி தில்லையில் அவள் பெயர் சிவகாமி திருக்கடவூரினிலே அபிராமி நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி அன்னை அவளல்லால் ஏது கதி? திரிபுரசுந்தரி சீர்காழியிலே சிவசக்தி பார்வதி கைலையிலே வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே திருவேற்காட்டினிலே கருமாரி தென்புதுவை நகரினிலே முத்துமாரி சமயபுரம் தன்னில் மகமாயி சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி |
|