💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

ஞானம் பெற வழி

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

நாம் படுத்தால் நம்மை தூக்க நாலு பேர் வேண்டுமே!

நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி?

நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க முடியாதே!

நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி திரிவது எப்படி?

நம்முள் இருக்கும் உயிரான இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்!

சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்!

நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!

"மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம் உணரலாம் மகிழலாம்! "

 இதுவே மெய் !

நான் மெய். என் உடல் மெய்.

என் பெற்றோர் சொந்த பந்தங்கள் மெய் தான்.

பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக பல ஆயிரம் வருடமாக மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர்.

இது சரித்தரம் கூறும் மெய்!

நாம் இருக்கும் பூமி உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.

இது விஞ்ஞானம் கூறும் மெய்.

இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின் சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே!

யார் இதை எல்லாம் படைத்தது! நடத்துகிறது ?

ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது?

ஏன் இந்த நாடகம்!

இயற்கையில் நானும் ஒரு அங்கமா?

இது எல்லாம் மெய் தானே!

இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி?

 உணர்வது எப்படி?

இந்த மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில் உணர காண முடியுமா?

"முடியும் " என்கின்றனர் மெய் ஞானிகள்!!

ஆம் "தவத்தின் " மூலம் உணரலாம்!

பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!

மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்! ஆனாலும் இது சரியல்ல!

அன்பே வடிவான இறைவனை, கருணை கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின போக்கு தேவை இல்லை!

அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!

கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி!

மெய்யுனுள் மெய்பொருள் அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்!

மெய்யை வருத்தாது, மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம் அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்!

இதுவே மெய்!

“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்மநேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"


 வாலைசக்தி!

அவளை அறிய அமரரும் இல்லை.அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி உட்புகும் ஆறு அறியேனே. -திருமந்திரம் 1053

அன்னை வாலைசக்தி  தாயின் திரியட்சரி  - சடாட்சரி  - நவாட்சரி மந்திரங்கள் :

ஓம் |ஐம்|க்லீம்|சௌம்

மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது அன்னை வாலை மந்திரம்.

  ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட  குழந்தைப்பருவ வடிவமே வாலைசக்தி வடிவம்.
எந்த யோகப்பயிற்சிமுறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும்
அனைவரும் வழிபட்ட தெய்வம் அன்னை வாலை.

எல்லா யோகிகளுக்கும் யோகமுதிர்சசியின் போது
அன்னை வாலை காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன

மேலும் சில சூபி ஞானியாரின் பாடல்களும் நூல்களும் இதை
ஒப்புக்கொள்கின்றன.

புனித மறைகளும், சிததர்களும் ஞானியரும் இறைவன்
நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர்.

ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு, எங்கு நமக்குள்
உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா
நம்மிடம்.....?

அந்த இறை சக்தி முதலில் அன்னை வாலைசக்தியாகவே
வெளிப்படுகின்றது.

பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு
கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.

இந்த தாயை வாலை என்றும்,
பாலாம்பிகா என்றும், ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி என்றும் அழைப்பர்.

சித்தர்கள் அனைவரும்
தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி
தொடங்குகின்றனர்.

வாலைத்தாய் அன்னை  ஆதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம்.

சித்தர்களின் தலைவன் முருகப்  பெருமானை வணங்கி வந்தால் அன்னை
வாலைத்தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். சக்தியைப் பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.

சிவம் என்பது அசையாப்பொருளாக உள்ளது. அதை இயங்கவைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி. அதுவே மூலசக்தி. மும்மூர்த்திகளின் செயல்
ரூபமே சக்தி.

ஸ்தோத்திரங்களை, ஸ்லோகங்களை விட மூலமந்திர ஜெபம் அந்த
குறிப்பிட்ட தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச் செல்லும்.
பீஜம் என்றால் விதை.  எப்படி விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி
பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம். எனவே பீஜ மந்திரஜபம் உயர்வாக
சொல்லப்படுகிறது.

அன்னை வாலைசக்தி தாயின் மந்திரங்கள் :

1. அன்னை வாலைசக்தியின் திரியட்சரி மந்திரம்:
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று சொல்லுவது சிறந்தது.

ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது. பிரம்மா.சரஸ்வதி இவர்களின
அம்சம். இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை
(பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும். இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,
மன்மதன் இவர்கள் அடக்கம். இம்மந்திரம் நல்ல
செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்
சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை
தோன்றியதாக வேதம் கூறுகிறது. இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளமான வாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள்
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி என்ற அன்னை வாலைசக்தித்தாய் .

இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து
ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.

2.அன்னை வாலைசக்தியின் சடாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||


3.அன்னை வாலைசக்தியின் நவாட்சரி மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர்
நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை வாலைசக்தியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும், ஆன்மீகத்திலும், மேன்மேலும் உயர... வழிகாட்ட... உறுதுணையாய்
நிற்க எல்லாம் வல்ல என் வாலைசக்தித் தாயை வேண்டுகிறேன்.

இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து
ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.


Previous Post Next Post