💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

சக்தியே இப்பிரபஞ்சத்தை இயக்குகின்றது

சக்தி என்பது இப்பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணமாகியத. சக்தி என்பது விண் என்ற சிறியத் துகள். இந்த விண்களின் திணிவுநிலைதான் இந்த உடலும் உயிரும். பார்க்கும் பொருள் எல்லாமே சக்திமயம். சக்தியே அணுமுதல் அண்டங்கள், உயிர்கள், உடல்கள் அணைத்துமாய் உள்ளதால் சக்தியே வணக்கதிற்குரிய கடவுளாகக் கொண்டு இறைவழிபாடு ஆற்றி வந்தோர் தங்கள் வாழ்க்கை நெறியைச் சாக்த சமயம் என்று சொன்னார்கள்.
சிவத்தை ஆளுமை நிலையில் வைத்து ஆணாகவும், சக்தியை பெட்டு என்ற அடக்க நிலையில் வைத்துக் பெண்ணாகவும் கற்பித்துக்கொண்டு சக்தி வழிபாடுகளை பெண் உருவத்தில் வழிபட்டனர். சாக்த சமயம்ளூ துவைதம் என்றும் பேசப்படுகிறது.

இந்தியாவின் முன் வரலாற்றில் சாக்த சமயம் வேறூன்றி இருந்தது. 22000 ஆண்டுகளுக்கு முன்னமே பெண் தெய்வங்களின் தோற்றம் இந்தியாவில் சிந்து சமவெளிநாகரீகத்தில் இருந்ததாகக் கருதப்பட்டது. வேதகாலத்தில் அதன் ஒருகுதி மங்கியிருந்ததாகவும், அனத்ன தோற்றம் சான்ஸ்கிரிட் இலக்கியங்கில் விரிவு பெற்றிந்தாகவும் அநேக நிலைகளில் 'பெண்மையின்' மறுதோற்றமாக இந்து பாரம்பரியத்தில் 'காணப்படுவதாக' வரலாறு கூறப்படுகிறது.

சான்ஸ்கிரிட் இலக்கியங்கள் மற்றும் இந்து தத்துவங்கள் தோன்ற சாக்த சமயமே ஊக்கம் அளித்தாகக் கூறப்படுகிறது. மேலும் இன்று இந்து சமுதாயத்தை மேலும் தாக்கம் செய்கிறது. தந்திரம் மற்றும் தந்திரமற்றி முறைகளில் சாக்தசமயம் இந்த துணைகண்டத்தின் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. இவை இரண்டுமே தென் இந்தியாவில் நிலைத்து காணப்படும் பாடசாலைகளில் ஸ்ரீடுலம் என்றும், கிழக்கு, மேற்கு இந்தியப்பகுதிகளில் காளிகுலம் என்றும் நிலைபெற்றுள்ளது.

சக்தியும் சிவமும்:

பெண்தெய்வமே முதன்மையானது, உயர்வானது என்ற கருத்துடையவர்கள் சாக்த சமயத்தினர். இந்த பெண் தெய்வமே படைக்கும் ஆதாரம் என்றும், இயக்கத்திற்குமு; ஆளுமைக்கும் பண்புருவம் என்றும் கருதுகின்றனர். 'இதுவரை வரலாற்றிலேயே இத்தகைய முழுமையான பெண் - சார்ந்த முறையை கண்டதில்லை' என்று கணிக்கப்ட்டது.

பெண் தெய்வம் ஆண் அல்லது நடுநிலையான தெய்வத்தை புறக்கணிப்பதில்லை என்ற நோக்குடையது சாக்த சமயம். சுக்தியற்ற நிலையில் இவை இரண்டுமே செயல்படுவதில்லை. ஆதி சங்கரரின் சாக்த பாடல் சௌந்தர்யலாஹரி (உ. 800ஊநு) குறிப்பிட்டுள்ளபடி, சிவன் சக்தியோடு இணைந்திருந்தால் படைத்தல் நிகழும். சக்தி இல்லையெனில் அசையவும் இயலாது.' இதுதான் சாக்த சமயத்தின் அடிப்படை உண்மை. காளி என்ற உருவமே சிவன் என்ற உயிரற்ற உடல் மீது நடைபோடுவதாகவும் உறுதி செய்கிறது.

மிகவிரிவாக கூறுவோமாயின் சக்தி என்பது பிரபஞ்சமே ஆகும் - சக்தி மற்றும் இயக்கத்தின் உருவகம், இந்த பொருள் உலகத்தின் இருப்புக்கும் இயக்கத்திற்கும் உந்துதல் சக்தியாகுமு;. சிவன் என்பது இதனின் தன்மறாற் ஆண்தன்மை, எல்லா உயிர்களுக்கும் தெய்வீக இடம். 'சக்தியின்றி சிவன் இல்லை, அல்லது சிவனின்றி சக்தியில்லை' இரண்டுமே ஒன்றுதான்.

வி. ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் கூற்றுபடி, சாக்த மதம் இந்து மதத்தின் இயக்கம். சாக்த மதத்தின் சிறப்பு சக்தியே அறிவு, சக்தி சிவனனின் அடையாளமுமாகும். சுருங்கக்கூறின் நிலையான சக்தி பிரம்மன். சக்தி பிரம்மனின் இயக்கம். மதக்கலைககளில், இந்த பிரபஞ்ச இயக்கச் சக்தி பாதி சக்தி பாதி சிவ தெய்வம் என்றும் அர்த்தநாரி என் கூறப்படுகிறது. சாக்த மதம் தேவிதான் ஆதாரம், சாரம் எல்லாப்படைப்புகளுக்கும் பொருள், பார்க்க, பார்க்க இயலாத சிவனோடு இணைந்த ஒன்று என்கிறது.

தேவி – பகவத புராணத்தில் சாக்த மத நூல்கள் தேவியைப்பற்றி கூறுவதாவது:- 'நானே தெய்வத்தின் வெளிப்பாடு. தெய்வ வெளிப்படற்றது மற்றும் தன்மாற்றம் கொண்டு தெய்வம். நானே பிரம்மம், விஷ்ணு மற்றும் சிவன். சரஸ்வதியும் இலட்சுமியும் பார்வதியும் நானே. நானே சூரியன், நானே நட்சத்திரங்கள், நானே சந்திரமன், நானே விலங்கினம் பறவைகள். நானே சாதியற்றவன், நானே திருடன். நானே தீய செயல்களின் கீழ்தரமானவன், உயர்ந்த செயல்களின் உன்னதமானவன். நானே பெண்மை, நானே ஆண்மை, நானே நடுநிலையானவன்.'

தந்திரத்தோடு இணைதல்:
சாக்த மதத்தின் நெருங்கிய தொடர்புள்ள தந்திரம் சந்தேகமுடையதாக, இந்தியாவில் கடைபிடிக்கப்படும் வைதீகமான கடவுள் வழிபாட்டின் கருத்துக்களையும் வடநாட்டிலுள்ள பில்லிஈ சூன்யம், மாய மந்திர செயல்பாடுகளையும், மேற்கு பகுதியிலுள்ள பாலுறவு சடங்குகளின் செயற்பாடுகளையும் (நியோ தந்திரம்) தூண்டுவதாக தவறான கருத்துக்கள் பரவலாக உள்ளது. உண்மையில் எல்லா தந்திரங்களும் சாக்தநியையுடையது அல்ல. அதுபோல் எல்லா விதமான சாக்த வேதங்களும் தந்திரத் தன்மையுடையன அல்ல.

தந்திரம் என்ற சொல், நம்பகத்தன்மையான இந்து சாக்த வேதத்துடன் தொடர்புடையது. இது சடங்குகளையும் பெண் கடவுள்களை வழிபடும் மந்திரம், இயந்திரம், நியாசம், முத்திரை மற்றும் குண்டலினி யோக வழிமுறைகளையும் குறிக்கிறது. இவையாவும் பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் தீட்சை பெற்று, எழுத்துப்பூர்வமான விளக்கங்கள் பெற்று பயிற்சி எடுக்கப்படுகிறது.

சாக்த தந்திரம் அணைத்து ஜாதி மத வேறுபாடுகளை கடடந்தது. ஒரு பெண் அல்லது ஒரு சூத்ரம் குரு என்ற தகுதியை ஏற்று நடத்துகிறார். எல்லா பெண்களும் சக்தியின் வெளிபாடுகளே. ஆதனால், அவர்கள் மதிப்பிற்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள். எவரொருவர் இவர்களைத் துன்புறுத்தினாலும், பெண் கடவுளின் கோபத்திற்குள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண் பயிற்சியாரும் தனக்குள் இருக்கும் பெண்மை தத்துவத்தைப்பற்றி உணரவேண்டும். பெண்மையாக மாறுவதன் மூலம் கடவுளை வழிபடுவதற்கு உரிமையளிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய சடங்கு முறைகள் என்பது 'நை;து எம்கள்' அல்லது பஞ்சமாகாரம் ஆகும். தந்திர சாக்த வேத பிரிவினர்களால் இவை சில சூழ்நிலைகளில் பின்படுத்தப்பட்டது. உறுதியான தத்துவங்களின் நடைமுறைகள் பற்றி தவறாகக் கேட்டறிந்த கருத்து கூறுபவர்களால் இக் கொள்கைகள் மிகைப்படுத்தப்பட்டன, உணர்வுப்பூர்வமாகவும் ஆக்கப்பட்டது. பஞ்சமாகாரம் பற்றிய கருத்துக்கள் பற்றியும, சில தலைமுறைகள் இவைகளை முழுவதுமாக ஒதுக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் வேறுபாடுகளுடைய கருத்துகள்  பல காலம்காலமாக இருந்து வருகிறது.
மொத்தத்தில், பொதுவாக சாக்த வேதத்திலும் இந்து மதத்திலும் காணப்படும் சிக்கலான சமுதாய வரலாற்று தொடர்புகள் கொண்ட தந்திர வேதம், மதங்களுக்குட்பட்டதாக அமைந்துள்ளது. இருப்பினும் பொதுவான சட்டம் யாதெனில், ' இந்து மத வேத நூல்களில் கருத்துகக்களும், செயற்பாடுகளும் ஒன்றினைந்த பண்புகளாக நிறைந்திருந்தது. தந்திரமற்ற பாரம்பரியத்திலிருந்து தந்திரத்தைப் பிரித்துக் காட்டுவது தவறு. சுமார் 6ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்திலிருந்தே சாக்ததந்திரத்தில் வேதம் சாரந்த பிராமணர்கள் இருந்தனர் என்று வரலாயு கூறுகிறது. சாக்த தந்திரம் வேத காலத்திற்கு முன்னமே தோன்றியிருக்ககூடம். அப்போது சமஸ்கிருத இந்து பாரம்பரியம் சாக்த தந்திரத்தை கையாள முயற்சித்தவர்களை வழி தவற செய்தது.

தெய்வத்தின் தன்மைகள்:
சாக்த வேதத்தை சார்ந்தவர்கள் வௌ;வேறான முறைகளில் தேவியை நெருங்கலாம். இருந்தாலும் ஒரே மேலான பெண் தெய்வத்தை பற்றி வௌ;வேறான கருத்துக்களை கொண்டுள்ளனர். தேவி அம்பிகை, காளி, தயாளம் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தேவி ஒருவர்தான் என்பதை மறப்பது சுலபம். தேவி தன்னை ஒன்று, தனக்கு இரண்டவதாக ஒன்று இல்லையென்று தேவி மஹாத்மயம் என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளது. 'நான் இவ்வுலகில் தனிமையில் இருக்கிறனே; வேறு யார் என் பக்கத்தில் இருக்கிறார்கள்?' இந்த தெய்வீக ஓர்மையின் பிரகடனத்தைத் தொடர்ந்து, இது மகா வாக்கியம் அல்லது மி உயர்ந்த தேவி மஹாமத்யம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற பெண்கடவுள்கள் அனைவரும் தன் ஆற்றலின் வெளிப்பாடுகள். ஏனெனில் அனைத்தும் அவள் வெளிப்படுத்தும் உருவங்கள் ஆகும். சாக்தர்களின் இஷ்ட தேவதை முதல் உருவமாக வழிபடுகின்றனர். தெய்வங்களை தேர்வு செய்வதில் பல காரணங்கள் உள்ளன. குடும்ப பாரம்பரியம், மதவழக்கம், குருவின் மரபுகள், தனிப்பட்ட தீர்மானம் போன்றவையும் இதனுள் அடங்கும். உண்மையாகவே ஆயிரக்கணக்கான கடவுள்களின் உருவங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலானவை குறிப்பிட்டக் கோயில்களோடும் மண்ணைச் சார்ந்ததும் சம்மந்தப்பட்டவை. இருப்பினும் மிகவும் முக்கியமான பெண்தெய்வ உருவங்கள் இந்து உலகம் முழுவதும் அறிந்தும் வழிபட்டும் வருகிறார்கள். இந்து மதத்தில் பெண் தெய்வங்கள் இவ்வாறான ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்களாக வெளிப்படுகிறது. மிக்சசிறந்த பிரதிபலன் கருதாக பெண்தெய்வங்கள் இந்து மதத்தில் பிரபலமானவை பின்வருமாறு:

1. ஆதி பராசக்தி: இந்த பெண் தெய்வம் முதன்மையானது. எல்லையற்ற பிரபஞ்சத்தின்மூலம்.
2. துர்கை (அம்பை, அம்பிகை) : மகாதேவி என்னும் பெண் தெய்வம், பொருள் பிரம்மன் என்ற தெய்வத்தின் வெளிப்பாடு.
3. இலட்சுமி (ஸ்ரீ) : பொருள் நிறைந்த பெண் தெய்வம் (சொத்து, சுகம், அதிர்ஷ்டம், அன்பு, அழகு, வளம் போன்றன)ளூ விஷ்ணுவின் உடன்படிக்கை (சக்தி)
4. பார்வதி (கவுரி, உமா) : ஞானம் நிறைந்த பெண் தெய்வம் (தெய்வீக அன்புளூ சகுணம் (பொருள் தன்மையுடைய) ஆதிபராசக்தியின் வடிவம்)ளூ சிவனின் உடன்படிக்கை (சக்தி)
5. சரஸ்வதி : பண்பாடு நிறைந்த பெண் தெய்வம். (அறிவு ஃ கல்வி, இசை, கலையும் மற்றும் விஞ்ஞானம் போன்றன)ளூ சரஸ்வதி நதியோடு அடையாளம் காண்பது.
6. காயத்திரி : மந்திரங்களின் தாயான பெண் தெய்வம்.
7. கங்கை : புனித நதியின் பெண் தெய்வம். கங்கை நதியோடு அடையாளம் காண்பது.
8. சீதை : இராமனின் உடன்படிக்கையான பெண் தெய்வம்.
9. ராதை: கிருஷ்ணரின் காதலியான பெண் தெய்வம்.
10. சதி: பொருள் தொடர்புள்ள பெண்  தெய்வம்ளூ சிவனின் முதன்மையான உடன்படிக்கை (சக்தி).

தந்திர தெய்வங்கள்:
இந்து மதத்தில் பெண் தெய்வங்களின் குழு மிகவும் இயல்பானது – ஒன்பது துர்ககைள் (நவதுர்கா), எட்டு இலட்சுமிகள் (அஷ்ட - இலட்சுமி) அல்லது பதினைந்து நித்தியங்கள் ஆகியன. முகாவித்யாக்களைப் போன்று (தசம மகாவித்யா) எந்த ஒரு குழுவும் சக்தியின் இயல்புகளை வெளிப்படுத்தியது இல்லை. இவைகள் மூலமாக 'ஒரே ஒரு உண்மை பத்து கோணங்களில் உணரப்படுகிறது என்று சாக்தர்கள் நம்புகின்றனர். இந்த தெய்வதாய் பத்து பிரபஞ்ச ஆளுமைத் தன்மைகளாக வணங்கவும், நெருங்கவும் படுகிறார்கள்.' மகாவித்யார்கள் இயல்பின் தந்திர குணமுடையவர்களாகக் கருதப்படுகின்றானர் இவர்கள் பொதுவாக கீழ்கண்டவாறு அடையாளம் கணப்படுகின்றனர்.

1. காளி : பிரபஞ்சத்தை அழிக்கும், மரணம், அல்லது காரத்தை விழுங்கும் தன்மையுள்ள பெண் தெய்வம் (மிகப்பெரிய உண்மையான காளி குலமுறை)
2. நாரா : வழிநடத்தும், காக்கும் பெண் தெய்வம் அல்லது மீட்டும் பெண் தெய்வம்.
3. லலிதா (திரிபுர சுந்தரி ஹோதாஷி) : மூன்று உலகங்களிலும் கிவும் அழகானவர் (மிக பெரிய உண்மையான ஸ்ரீகுல முறை)ளூ தந்திர பார்வதி.
4. புவனேஸ்வரி : உலகத்தின் தாய் என்னும் பெண் தெய்வம் அல்லது இந்த உலகமும் ஃ பிரபஞ்சமும் இந்த பெண்தெய்வத்தின் உடல்.
5. பைரவி : அச்சமூட்டும் பெண்தெய்வம்.
6. சின்ன மஸ்தா : தன் தலையை கொய்யும் பெண் தெய்வம்.
7. துமாவதி : விதவை பெண் தெய்வம்.
8. மாதங்கி : ஊர் சுற்றும் பெண் தெய்வம் (காளிகுலமுறை)ளூ லலிதாவின் முதல் மந்திரி (காளிகுலமுறை)ளூ தந்திர சரஸ்வதி.
9. கமலா:  தாமரை பெண்தெய்வம்ளூ தந்திர இலட்சுமி. சப்த – மந்திரிகம் (ஏழு சிறய தாயார்கள்) என்றாவது முக்கியமான குழுவை சார்ந்தது. இதன் சக்திகள் முதன்மை கடவுளை விட வேறானது. இது சாக்த தேவி எழு தீய சக்திகளை வெல்ல துணைபுரிந்ததாக வர்ணிக்கப்படுகிறது. மற்றும் 64 யோகினிகளும் இக்குழுவில் அடக்கம்.

நன்றி ஈஸ்வரன்.
Previous Post Next Post