" எவ்வுயிரும் இன்புற்று இருக்க
எவ்வுயிருக்கும் அமைதி நிலவுக
எவ்வுயிருக்கும் ஆனந்தம் பெறுக
எத்திசை உயிர்களும் இவற்றை பெறுக!"
தியானம் செய்யும் முன் இப்பாடலை அனு தினமும் பாடி தியானம் செய்தால் நற்பலன் உண்டு.
பிராத்தனை,
பணத்திற்காக அல்ல,
உடல் நலத்திற்காக அல்ல
சுவர்க்கத்திற்காக அல்ல,
ஞானம் பெறவே பிராத்தனை. மற்றவற்றிக்காக செய்தல் சுயநலம் கருதி செய்யும் நிலை, அதனால் ஞானம் பெற முடியாது.
தியானத்தின் திருப்பு முனை:
நமது உடலில் மூன்று முக்கிய நரம்பு ஓட்டங்கள் இருப்பதாக யோகிகள் கூற்று,
முதுகெழும்பின் இடப்பக்கத்தில் இடகலை என்ற நரம்புத் தொகுதியும், வலப்பக்கத்தில் பிங்கலை என்ற நரம்புத் தொகுதியும், முதுகெழும்பின் உள்ளே சுழுமுனை என்ற நரம்பு தொகுதியும் உள்ளன. இந்த சுழுமுனை நரம்பு உள்கூடாக உள்ளது. இதன் முனை அடைபட்டுள்ளது என்றும் சாதாரன மனிதனுக்கு இது அதிகப் பயனில்லை என்றும் யோகிகள் கூறுகின்றனர்.
சாதாரன மனிதனுக்கு பொறிகளிலிருந்து உள்ளே வரும் உணர்ச்சிகளும், வெளி தசைகளுக்கு செல்லும் கட்டளைகளும் இடகலை, பிங்கலை நரம்புகள் வழியாக செல்கின்றன, நமக்கு இப்போது செய்ய வேண்டியனவாக இருப்பது கடினமான செயல் உள்ளத்தில் ஆழ்ந்து முழ்கி இருந்து அனிச்சையாக வெளிவரும் எண்ண அலைகளை கட்டுப்பட்டுத்துவது முதல் வேலை. தீய செயல் சந்கேமின்றி உணர்வு அல்லது நினைவு மட்டத்தில் தான் நிகழ்கிறது. தீய செயல்களின் நிகழ்வுகளுக்கு காரணம் மனத்தின் உணர்வு இல்லாத உள் நனவில் சப் கான்சியஸ் மைன்ட் அடிமட்டத்தில் முழ்கி கிடக்கிறது. ஆதலின் அது ஆற்றல் மிக்கது.
உள் நனவை கட்டுப்படுத்த பின்நனவுக்கு அப்பால் உள்ள உயர் நலவை ஆராய வேண்டும். ஆக நமக்கு இருவகை வேலைகள் உள்ளன. முதலில் சாதாரன நரம்பு ஓட்டங்களான இடகலை பிங்கலை ஓட்டங்களை சரியாக இயங்க செய்தும், உள் நனவில் அமுங்கியிருக்கும் உணர்வின் பயனத்தை திடீரென்று வெளிவரும் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். பிறகு உயர் நனவை சூப்பர் கான்சியஸ் மைன்ட் பெற வேண்டும்.
நீண்ட கால பயிற்சியால் மனதை அடககி ஒரு முகப்படுத்தி, இந்த நிலையை அடைபவனே யோகி.
சுழுமுனை இப்போது திறந்து அதனுள் இதற்கு முன் சென்றிருநத ஓர் உணர்ச்சி ஓட்டம் இயங்கி, மேலே பல ( தாமரை போன்ற) மையங்களை அடைந்து இறுதியாக மூளையை அடைகிறது. அப்போது யோகியானவன் தானே பிரம்மம் தானே இறைவன என்பதை அறிவான் இதுவே இவனை ஞானியாக்கும் சுழுமுனை தியானம்
திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவாயம்