இறை சக்தியும் ஞான
அருளும் ஞான தேவியுமாக ஜோதி
நிலை சொரூபமாக அருள்கடல் சோதியாக கருணை அம்பிகையாக
நின்று ஆனந்த சித்த ஞானமாகிய
சௌபாக்கிய நிலையை அளிக்கும் அன்னை
ஆதி சக்தி ஆனவள். அன்னை
ஆதி சக்தியே நான்
உனது திருவடியை வணங்குகின்றேன். எனக்கு
உன் திருவடிகளை உன்னருகில் நெருங்கி வணங்க எனக்கு என்ன தகுதி
உன்றோ .எனினும் யான் செய்த
புண்ணிய பாக்கியத்தில் உன்னுடைய அனுமதியோடு தாயே உன் திருவடி
வணங்குகிறேன்.
நீ எல்லையற்றவள் மகா
பேரொளி ஜோதி சொரூபமானவள்.இந்த
அகிலத்தையே காத்து ரட்சிக்கும் உயர்
ரத்தினம் கொண்ட சிம்ம ஆசனத்தில்
அமர்ந்த பட்டத்து மகாராணி ஆனவள்.உன்
தி ருபொற்பாதங்கள் உயர் ரத்தினங்களை விட
பெருமதிப்பு கொண்டதன்றோ.இத்தகைய புகழ்மிக்க திரு
பொற்பாதத்தை அடியேன் சிறியேன் வணங்க
வேண்டிய பாக்கியத்தை கொடுத்து அருளிய அன்னைக்கு கோடான
கோடி வணக்கங்கள். உன்னையே என்றும் சிந்திக்க
வேண்டும் ,அன்னையே என்றென்றும் உன்
சிந்தையில் என் நடத்தை
இருக்கவேண்டும். உன் புகழையே அறிய
வேண்டும். தியானம் என்றாலும் யோகம்
என்றாலும் அது உன்னை பற்றியே
உன்னுடைய மகா பெருஞ்சோதி சுடரில்
இரண்டற கலக்கும் திகைப்பறியா பரம ஜோதியாக பேரருள்
அருளும் பராசக்தி சொரூப ரூபிணியாக நின்று
தன் முன் ஆத்ம ஞான
சித்த யோகத்தினை அருள வேண்டும், என்றென்றும்
நான் பேசும் மொழிகள் அனைத்தும்
உன்னை அழைக்கும் அழகிய மந்திரமாக இருக்க
நீ எனக்கு அருள வேண்டும்.
அன்னை அதிசக்தி ஆனவள் கருணை உள்ளம்
கொண்டவளாக கோடான கோடி செல்வம்
அருளும் சௌபாக்கியவதியாக இருக்கின்றாள்.அன்னை தன் குழந்தைகளுக்கு
ஏற்படும் பிரச்சனைகள் மனக்குழப்பம் போன்ற எல்ல குறைகளையும்
தீர்த்து சாந்தமன மனநிலையை ஏற்படுத்தும்
கால சூழலை அளிக்கும் சாந்த
சொரூபிணியாக இருக்கின்றாள். தன்னுடைய பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தன்னுடைய இமை புருவ அசைவின்
மூலம் எல்லா துயரங்களையும் தொலைதூரம்
ஓட செய்பவள்.
ஸ்ரீ ஆதிசக்தி பாலா
ஞான பீடம்
பில்லூர்
கும்பகோணம் - திருநள்ளார் சாலை
திருவாரூர் மாவட்டம் - 609403


