💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

கடாக்ஷ சதகம்



கடாக்ஷ சதகம்




அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அன்னை காமாட்சி உமையே.....

 

||10||

ப்ராப்னோதி யம் ஸுக்ருதினம் தவ பக்ஷபாதா

காமாக்ஷி வீக்ஷண விலாஸகலா புரந்த்ரீ | 

ஸத்யஸ்தமேவ கில முக்திவதூர் வ்ருணீதே 

தஸ்மான் நிதாந்தம் அனயோரிதம் ஐகமத்யம்

    ஹே காமாக்ஷீ! உன்னுடைய  கடாக்ஷத்தினால்  நின் அழகிய பார்வையின் ஒரு பாகமாகிற குடும்ப ஸ்த்ரீயானவள்(திருமகள்) எந்த புண்ணியசாலியை அடைகிறாளோ , அவளையே மோக்ஷமாகிற ஸ்திரீயும் வரிக்கிறாள்.இருவருக்கும் உள்ள ஒற்றுமை அதிசயமாக உள்ளது!!

          போகமும்,மோக்ஷமும் ஒரே இடத்தில் அமையாது என்பது வழக்கு. ஆனால், அம்பிகையின் க்ருபையினால் அவளுடைய கடாக்ஷமானது பக்தன் மீது ஏற்பட்டால், அவனுக்கு சகல ஸெபாக்கியங்கள் மேற்படுவதுடன் மோக்ஷமென்கிற புருஷார்த்தமும் தானாகவே  கிடைக்கின்றது. 

 


 

||11||

யாந்தீ ஸதைவ மருதாம் அனுகூலபாவம் 

ப்ரூவல்லி ஶக்ரதனுருல்லஸிதா ரஸார்த்ரா | 

காமாக்ஷி கௌதுக தரங்கித நீலகண்டா 

காதம்பினீவ தவ பாதி கடாக்ஷமாலா

காமாக்ஷீ! உன்னுடைய கடைக்கண் அருளென்னும் மேக கூட்டமானது மருந்துகளுக்கு அதாவது காற்றுக்கும், தேவர்களுக்கும் எப்பொழுதும் அநுகூலமாக இருப்பதாயும், உனது புருவக் கொடியினால் வானவில்லின் சோபை போல் விளங்குவதாயும், கருணையாகிற ஜலத்தினால் நனைந்ததாயும், நீலகண்டனுக்கு மகிழ்ச்சியாகிற அலையை விருத்தி செய்கிறதாயும் விளங்குகிறது.

இங்கு அம்பிகையின் கடாக்ஷங்களான மாலையை காதம்பனிக்கு சமமாக வர்ணிக்கப்பட்டது.வரிசையாய் நிற்கும் மேகக்கூட்டத்திற்கு காதம்பினீ என்று பெயர்.

 

||12|| 

கங்காம்பஸி ஸ்மிதமயே தபனாத்மஜேவ 

கங்காதரோரஸி நவோத்பல மாலிகேவ | 

வக்த்ர ப்ரபாஸரஸி ஶைவல மண்டலீவ 

காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ருசிச்சடா தே

 

காமாக்ஷி தாயே உனது

கடாக்ஷ சோபையின் கூட்டமானது 

உன்னுடைய புன்சிரிப்பாகிய கங்கா ஜலத்தில் கலந்தது போலவும், பரமசிவனின் மார்பில் புதிய நீலோத்பல மாலை போலவும், உனது முக காந்தியாகிற ஸரசில் பாசிக்கொத்து போன்றும் பிரகாசிக்கின்றது!

 

கங்கா ஜலமானது வெளுப்பாகவும்,யமுனா நதியின் ஜலம் கருப்பாகவும் இருப்பதாகச் சொல்லப்படும். சிவனுடைய நிறம் வெளுப்பு நிறமாகச் சொல்லப்படுகிறது .தபனென்று ஸுர்யனுக்கு பெயராகையால்,அவனுடைய பெண்ணான யமுனைக்கு தபனாத்மஜா என்ற பெயர் உண்டு.

கடாக்ஷத்தின் காந்தியினுடைய கூட்டமான சேர்க்கையானது இங்கு கருப்பு நிறமாய் இருப்பதாக  வர்ணிக்கப்பட்டது . 

 

||13||

ஸம்ஸ்காரத: கிமபி கன்தலிதான் ரஸஜ்ஞ-

கேதாரஸீம்னி ஸுதியாமுபபோகயோக்யான் |

கல்யாணஸூக்திலஹரீகலமாம்குரான்ன:

காமாக்ஷி பக்ஷ்மலயது த்வதபாங்கமேக:

             

ஹே காமாக்ஷி! உனது கடாக்ஷமாகிற மேகமானது  எனது நாவாகிற  வயலில் தவறாமல் மாரியெனப் பெய்ததால் முளைத்தவைகளும், புத்திமான்களுக்கு அனுபவிக்கத்  தக்கவைகளுமாகிய மங்களகரமான கவிசக்தியாகிற சம்பா பயிர்களை செழுமையாய் வளரச் செய்யட்டும்.   அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ஒருத்தருக்கு ச்ரேஷ்டமான கவிதாசக்தி ஏற்படும் என்பது தாத்பர்யம்..

 

: ||14|| சாஞ்சல்யமேவ னியதம் கலயன்ப்ரக்ருத்யா 

மாலின்யபூ: ஶ்ரதிபதாக்ரமஜாகரூக: | 

கைவல்யமேவ கிமு கல்பயதே னதானாம் 

காமாக்ஷி சித்ரமபி தே கருணாகடாக்ஷ

           

அன்னையே காமாக்ஷி! உன் கருணைமிக்க கடாக்ஷமானது இயற்கையாகவே எப்பொழுதும் சஞ்சல ஸ்வபாவத்தோடு இருந்தும், நமஸ்கரித்த பக்தர்களுக்கு பாபம் நிறைந்த பூமியாகிற ஸம்ஸாரத்தை வேதங்களாகிற வழியின் மூலமாகத்தாண்டுவதில் சிரத்தையுள்ளதாய்வியக்கத்தக்க விதமாய் மோட்சத்தை எப்படி உண்டு பண்ணுகிறது? ஆச்சரியமே!!!

 

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.

 


Previous Post Next Post