💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

ஸ்ரீ லலிதா சகஸ்திர நாமம் விளக்கம் ஹயகிரிவரின் வரலாறு

 

 




        அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மகா திரிபுர சுந்தரி குழந்தை வடிவமாக வீற்றிருக்கும் பில்லூர் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் திருபொற் பாதத்தினை வணங்கி ஆத்ம ஞானம் எனும் ஆன்மிக தொடர் ஸ்ரீ லலிதா சகஸ்திர நாமம் விளக்கம் அன்னையின் தோற்றம் வடிவம் அவதார லீலைகளை காண இருக்கின்றோம்


https://youtu.be/-jl9KWoT-Do 



தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் 5 வது  அத்தியாயத்தில் ஸ்ரீ ஹயகிரிவரின் வரலாறு காணப்படுகிறது . ஸ்ரீ மகா  விஷ்ணு பத்தாயிரம் ஆண்டுகள்  அசுரர்களுடன் போர் புரிந்து பிரம்ம தேவர் செய்த யாகத்தினை காத்து  நின்றார்.   பல்லாயிரம் ஆண்டு காலம் தனது தூக்கத்தினை விட்டு கண் இமை அசையாமல் அந்த யாகத்தினை காத்துவந்தார் பகவான் ஸ்ரீ மகா விஷ்ணு. 



இறுதியாக யாகம் நிறைவு பெற்றது அனைவரும் தன் தன் அவிர்பாகம் பெற்று அவரவர் அவரவர் லோகம் சென்றனர். அப்படி தன்னுடைய  பல ஆண்டு காலம் தூக்கம் இன்மை மற்றும் அசுரருடன் போர் புரிந்த அயர்வின் காரணமாக நாணேற்றிய சார்ங்கம் என்ற தனது வில்லின் நுனியை தமது தாடை மீது கீழ் தாங்களாக  வைத்து கொண்டு யாகம் நிகழ்ந்த இடமதிலே நின்றபடியே பல ஆண்டு காலம் தூங்கினார் என்று தேவி பாகவதம் நூல் கோருகிறது. பரந்தாமன் ஸ்ரீ மகா விஷ்ணு தூக்கத்தில் இருப்பதினால் காக்கும் தொழில் ஸ்தம்மித்து நின்று விடுகிறது. இதனாலே லோகத்தில் உள்ள ஜீவராசிகள் மற்றும் தேவலோக மக்களை காப்பதற்கு யாரும் இல்லாமலே பல துன்பத்திற்கு ஆளாகி  நிற்கிறார்கள். இதற்க்கு என்ன வழி என்று அனைத்து தேவர்கள் எல்லாம் கலந்தாய்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். பிரம்ம தேவன் செல் என்ற கரையானை படைக்கின்றார். யாரை கரையனாக படைக்கின்றார் என்றால் தேவேந்திரனை செல் ரூபமாக படைக்கின்றார். இதுவரைக்கும் செல் என்ற கரையான் கிடையாது அப்போதுதான் செல் என்ற கரையான் உருவெடுக்கின்றது. யார் உருவெடுக்கின்றார் என்றால் தேவேந்திரன் செல்லாக உருவெடுக்கின்றார். எதற்க்காக கரையான் வடிவில் உருவெடுக்கிறார் என்றால்  பகவான் ஸ்ரீ விஷ்ணு வில்லினை தன்  முக வாய் கட்டையில் வைத்து தூங்குகிறார் அல்லவா. அந்த வில்லின் நாண்  கயிற்றினை தன்  பற்களினால் அதாவது செல் என்ற கரையானின் பற்களினால் கடித்து அந்த நாணினை அறுத்துவிட்டால் வில் அறுந்து அசைவுறும் அப்படி அசைவுறும் பொது பகவான் ஸ்ரீ விஷ்ணு அசைவுருவார் . உடனே அவர் தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார் என்று எண்ணி அந்த செல் என்ற கரையான் உருவம் கொண்ட தேவேந்திரன் வில்லின் நாணினை அறுக்க எதிர்பாராதவிதமாக யாரும் எதிர் பார்க்காத நிகழ்வு நடந்துவிடுகிறது. என்ன நடந்தது என்றால் செல் நாண்  கயிற்றை அறுத்தவுடன் பகவானின் கழுத்தினை அறுத்துக்கொண்டு சிரசு ஆனது தனியாக போய் விழுந்துவிடுகிறது. தேவர்கள் எல்லாம் ஸ்தம்பித்து போய்  நிற்கிறார்கள் . நாங்க

ள் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லயே. இத மாதிரி நிகழும் என்று எண்ணி இந்த செயலை செய்யவில்லையே. நங்கள் நினைத்தது ஒன்று  நடந்தது வேறாக இருக்கின்றதே  நங்கள் பகவான் அசைவுறுவார் தூக்கத்திலிருந்து எழுவார் என்று எண்ணியே இவ்வாறு செய்தோம். இப்படி நிகழ்ந்துவிட்டதே இதற்க்கு  யாரிடம் வழி கேப்போம் என்று எண்ணி திகைத்து நின்று அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மகா திரிபுரசுந்தரியை போற்றி துதிக்கின்றார்கள் வழிபாடு செய்கிறார்கள். அன்னை தேவி மகா பராசக்தி அகிலம் ஆளும் நாயகி பரம பிரமத்தோடு கர்ஜிக்கும் சிம்மாசனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறாள். அன்னையை தாழ்பணிந்து வணங்கி நடந்த நிகழ்விகளை எல்லாம் கோருகின்றார்கள். இதை கேட்ட அன்னை இவை எல்லாம் தன்னுடைய திருவிளையாடல்  என்று கூறுகின்றாள்.                                                                                                                        






              அதீத பலம் கொண்ட அரக்கண்  ஒருவன் தன் உருவம் கொண்ட ஒருவனாலே எனக்கு அழிவு வேண்டும் என்று வரம் பெற்று இருக்கின்றான். அவன் குதிரை முகம் கொண்டவன். அவனை அழிக்க வேணுமானால் குதிரை முகம் கொண்ட ஒருவரால் அவனை அழிக்க முடியும். அதனாலே பிரம்ம தேவன் செய்த யாகத்த்திலே அறுபட்டு கிடக்கிதே ஒரு குதிரையின் சிரசு அதை பகவான் ஸ்ரீ விஷ்னு உடலில் பொருத்தங்கள் என்று அன்னை ஆசி கோரினாள்.  அதுபோலவே அந்த குதிரை சிரசை பகவான் ஸ்ரீ விஷ்னு  உடலில் பொறுத்த அன்னையின் அருள் ஆசியால் பகவான் ஸ்ரீ விஷ்ணு ஜீவன் பெற்றார் என்கிறது தேவி பாகவதம். 






பகவான் ஸ்ரீ விஷ்ணு பல ஆயிரம் ஆண்டு காலம் ஹயகிரிவரின் அவதாரத்திலேயே ஸ்ரீ காஞ்சி மாநகரிலே  அன்னை ஸ்ரீ லலிதை மாக திரிபுர சுந்தரியை உபாசித்துக்கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார். குடமுனியான ஸ்ரீ அகஸ்தியர் மகா முனிவருக்கு அன்னை ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியின் அவதார லீலைகளை உபதேசித்த பின் ஸ்ரீ மகா விஷ்ணுவின் பழைய முகம் மீண்டும் வரும் என்று அன்னை ஆசி கூறினாள் .


Previous Post Next Post