💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

ஆத்ம ஞானம்


     அன்னை ஆதி சக்தியின் அருளினாலும் குழந்தை வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாவின் அருளாசியோடு  அகமார்ந்த ஆத்ம ஞானம் பற்றிய ஞான சிந்தனை. ஆத்மம் என்றால் தன்னுடைய ஆத்மா  ஒரு மகா ஜோதியின் சுடர் ஆற்றலிலிருந்து ஒரு அங்கமாக பிரிந்து வந்த ஒரு அங்க ஜோதி சுடர். இந்த மகா ஜோதி சுடர் உருவமற்றது. இந்த மகா சுடரிலிருந்து வந்த ஒரு அங்க சுடரும் உருவமற்றதாகவே இருக்கும். நாம் கண்களால் காண இயலாத ஜோதி சுடரானது நம் கண்களால் உணரமுடியும் என்பது ஆத்ம ஜோதியின் ஞான சிந்தனை. நம் புற கண்களால் உணரக்கூடிய மகா ஜோதி சுடரை தன்னுடைய அக கண்களால் ஒரு ஜோதி சொரூபமாக உணரும் நிலையே ஆத்ம ஞான நிலை. எனினும் இந்த ஞான நிலையை அடைவதற்கும் இந்த ஆத்ம நிலையை உணர்வதற்கும் ஒரு தெளிவு நிலை வேண்டும். இந்த தெளிவே தன் மனம் சார்ந்த பிடியிலிருந்து முழுவதுமாக விலகி ஆத்ம நிலையில் இருக்க வேண்டும்.தெளிவாக கூறினால் ஒரு ஜீவன் பிறப்பதற்கு கரு தோன்றும் போது ஒரு மகா ஜோதியின் சுடர் ஆற்றலிருந்து ஒரு அங்கமாக  பிரிந்து தோன்ற கூடிய கருவில் இணையும். இந்த கரு அன்னையின் கருவியில் வளரும்போது ஆத்ம நிலை கட்டுப்பாட்டு சுழற்சியுடன் வளரும்.இதில் மனம் என்ற பிணைப்பே இருக்காது, ஒரு ஜீவன் ஜெனிக்கும்போது மனம் என்ற பிணைப்பு ஏற்படும்.இந்த மனம் மண்ணுலகின் ஆசைகளின் பக்கமே திசை மற்றும் நோக்கங்களை கொண்டிருக்கும். இந்த மனம் அனைத்து ஐந்து மற்றும் ஆறறிவு உயிரினங்களுக்கு மட்டுமே அவை செனிக்கும் பொது துணை ஆத்மாவாக இணையும் ஐந்து அறிவு உயிரினம் இந்த மனம் சார்ந்த கட்டுப்பாட்டில் தன் வாழ்க்கை நிலையை நடத்தாது .தன் ஆத்ம நிலைக்கு கட்டுப்பட்டே தன் வாழக்கையை நடத்தும்.மனிதனுடன் தொடர்பு கொண்ட ஐந்து அறிவு உயிரினம் மட்டும் தன் ஆத்ம நிலை கட்டுப்பட்டு நிலையிலிருந்து மாறி மனம் சார்ந்த கட்டுப்பாட்டு நிலைக்கு சில சமயங்களில் வாழ்க்கையை நடத்தும். மனிதன் ஆனவன் தன்னுடைய சிந்தையை பொருத்து , தான் மனதின் கட்டுப்பாட்டில் அல்லது ஆத்ம கட்டுப்பாட்டில் வாழ்க்கை நிலையை நடத்துகிறான்,எந்த ஒரு மனிதன் தனது மனம் சார்ந்த இச்சை , ஆசைகளுக்கு இனங்க தன் வாழ்க்கைநிலைக்கு வழி கொடுக்கின்றானோ அவன் சராசரி ஒருமனிதனாக இந்த லோகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து , இந்த மண்ணுலகில் மனம் சார்ந்த இச்சை இன்பமே சுகம் என்று எண்ணி மோட்ச நிலையை  அடையாமல் துன்பம் அடைகின்றான். மனிதனானவன் தன்னுடைய மனம் சார்ந்த கட்டளைகளை தள்ளி வைத்துவிட்டு அதாவது மனம் சார்ந்த கட்டளைக்கு இனங்காமல் தன் ஆத்மா இடும் கட்டளைக்கு இனங்கி தன் வாழ்க்கை நிலையை நடத்துவாயின் அவன் " ஞான யோகி ஆகின்றான் ". எப்படி ஆத்மாவின் கட்டுப்பாட்டில் வாழ்வது ?, மனம் என்பது இந்த மண்ணுலகிலிருந்து தோன்றி இணைந்ததால் இந்த மண்ணுலகில் உள்ள இச்சை இன்பத்தின் பக்கமே தனது வழக்கை நிலையை நடத்த ஈர்த்து செல்லும். பணம் சம்பாதித்தல் , வாகனம் , பொன் ,சொத்து அழகிய பெண்,போன்றவற்றில் எண்ணங்களை  அதிக கவனம் மற்றும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும். மேலும் மனம் ஆனது உடலை வளர்க்க மட்டுமே உணவை அளிக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், தன்னில் இருக்கும் ஆத்ம ஆற்றலை அதிகரிக்க மனம் ஆனது துணை நிற்காது . எப்படி ஆத்ம ஆற்றலை அதிகரிப்பது ஆத்மாவிற்கு எப்படி உணவளிப்பது , நாம் உள்ளிருக்கும் மூச்சு காற்றை நன்றாக அகமீர்த்து சிறிது நேரம் நிறுத்தி வைத்து,வெளியிடுவதே நம் ஜீவனில் உள்ள ஆதமாவிற்கு ஆற்றல் மிக்க உணவாக கருதபடுகிறது. இவ்வாறு மூச்சு பயிற்சி மூலம் ஆத்மாவின் ஆற்றலை அதிகப்படுத்தும் போது தனது ஜீவனில் மனம் தனது கட்டுப்பாட்டை இழந்து ஆத்மா தனது கட்டுப்பாட்டில் ஜீவனை இருக்கவைக்கும்.இந்த மூச்சு பயிற்சி மூலம் தன் ஜீவனில் உள்ள ஆத்மா இயங்கி இரு நிலையில் உள்ள நம் ஜீவன் ஒரு நிலை என்ற கட்டுப்பாட்டிற்கு வரும். அப்போது சிந்தனை சிதறல் இல்லாமல் உள்ள நேர்மறை சிந்தனையாக இந்த மண்ணுலகில் உள்ள இச்சைக்கு இனங்காமல் மண்ணுலகிற்கு அப்பாற்பட்டு விண்ணுலகம் வரை சிந்தை பாயும். இப்படி ஒற்றை மற்றும் நேர்மறை சிந்தனையாக இச்சை மனம் இல்லாமல் தன்னுடைய ஜீவன் அகத்தில் இருக்கும் தனது ஆத்மாவை ஒரு அங்க ஒளி ஆற்றலாக கொண்டுவந்து மகா பேரொளி ஆற்றலான மகா பேராத்மாவில் கலப்பதே ஞான மோட்சம்.