💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

அன்னை ஆதி சக்தியே ஆதி தோற்றம்


அருளால் ஆனந்த சக்தியால் ஞான சக்தியை வெளி கொணரக்கூடிய மகா சக்தி கொண்டவளாக இருக்க கூடியவள் அன்னை ஆதி சக்தியான ஞான சொரூபிணி ஜோதி சொரூபமாக இருக்கக்கூடியவள் அன்னை பாலா திரிபுர சுந்தரி ஆனவள். ஞானமே  சொரூபமாகவும் ஞானமே பேரொளியாகவும் ஞான உட்பொருளாகவும் திகழ கூடியவள் அன்னை ஆதி சக்தி. அன்னை ஆதி சக்தி இந்த லோகத்தில் முதலில் தோன்றி இந்த லோகத்தை படைத்தது காத்து ரட்ஷித்து அருளக்கூடியவளாக உள்ளாள்.அன்னை அகிலாண்டகோடி அகிலாண்ட நாயகின் பேரருளாலே இந்த லோகங்கள் இயக்கமும் பேராற்றலும் பெற்று பல வளங்களை கொண்டு செல்வ செழிப்போடு காணப்படுகின்றது. அன்னை ஆதி சக்த்யால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களுக்கும் ஆற்றல் என்பது உண்டு. இயக்க நிலை இல்லாமல் இருப்பதால் உயிரற்ற நிலை என்பது இல்லை. ஆற்றல் நிலையை கொண்டு இருக்கும். உதாரணமாகி மண் அதாவது நிலத்தை எடுத்துக்கொள்வோம் அது உயிரற்ற நிலை போன்று ஒரேஇடத்தில் நிலையாக இருக்கும். எனவே மண் என்பது ஒரு ஜீவன் இல்லை உயிரற்ற பொருள் என்று நாம் எண்ணுவோம் அனால் பலவித உயிரினங்களை உருவாக்கக்கூடிய பேராற்றலை கொண்டது இந்த மண்,அக மண் என்பதை ஒரு ஜீவபொருளாக கருத வேண்டும். நாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இந்த மண் என்ற நிலம் நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாகவும், நாம் உண்ணும் உணவு உற்பத்தி ஆகுவதற்கு ஆதார பொருளாகவும் உள்ளதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வணங்க வேண்டும் என்பது கடமை.
அன்னை ஆதி சக்தி மகா இமய சக்தியாகவும் ஞான சக்தியாகவும் திருதேவியாகவும் பாரா சக்தியாகவும் படைத்தது காத்து ரட்ஷித்து அருள் புரிகிறாள். சூரியன் முதலான முன்னோடி தேவர்களுக்கும் பிரம்மா, விஷ்னு , ஈஸ்வரன் போன்ற மும்மூர்த்திகளுக்கு சக்தியை அளிக்கும் மகா திரிபுர சுந்தரியாகவும், ராஜ ராஜேஸ்வரியாகவும் விளங்குகிறாள். கலைமகளும், மலை மகளும் துணையாக நிற்க, வராகி தேவியை படை தளபதியாக கொண்டு , மாதங்கி தேவியை மந்திரியாக கொண்ட அரசபையில் பட்டத்து ராணியாக அழகு அன்பு அதிகார தோரணையில் அமர்ந்துள்ளாள். சிந்தாமணி கிரகத்தில் உயர் வகை ரத்தினமான சிந்தாமணி ரத்தின கற்களை கொண்டு பதித்து உருவாக்கிய சிந்தாமணி மாளிகையில் நான்கு கரமும்,சிவந்த முகத்துடன்,ஒளி பொருந்திய கண்களும் மலரின் மென்மையை ஒத்த அழகு இதழ் திருவாயும்,சங்கு வடிவ கழுத்துடன் சூரியனை நெற்றி திலகமாக கொண்ட குங்கும குழம்பு போல் கொண்ட திருமேனியும்   ஒரு கணம் திகைத்து நிற்கும் அளவில் பேரழகு கொண்டவளாக அன்னை ஆதி சக்தி ராஜ பரிவர்த்தனையில் அமர்ந்துள்ளார்.
தொடரும் ...........
நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

Previous Post Next Post