💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

அன்னை ஆதிசக்தியே ஆதி தோற்றம் பாகம் 2

ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

 அன்னை ஸ்ரீ ஆதி சக்தி பாலா திரிபுர சுந்தரியின் அருளாசியுடன் வழங்கும்

 ஆத்ம ஞான மலர்

   ஞான தொடர்... பாகம் 2

ஸ்ரீ ஆதி சக்தியின் ஆதி ரூபமான ஜோதி ரூபத்தினை மனிதில் எண்ணி இருத்தி தியானம் செய்வதற்கு  ஒரு மகா சக்தியாகவும், ஒரு பெண்ணின் ரூபமாகவும் காட்சி அளிக்கிறாள்.தன தான்யம் செல்வ சௌகரியத்தை அளிக்கும் செல்வ சொருபிணியாக அன்னை
வீ ற்றுரிக்கின்றாள்.

நான்கு கைகள் உள்ளவளே,
சிரசில் சந்திரகலையை தரித்தவளே,
உன்னத ஸ்தானமுள்ளவளே,
குங்குமத்தால் சிவந்தவளே ,
நாம கரும்பு, பாசம், அங்குசம், புஷ்பபானம்,
இவைகளை கரத்தில் ஏந்தியவளே,
ஜகத்தின் தாயே உனக்கு நமஸ்காரம்.

ஒரு கையில் கரும்பு வில் , மற்றொரு கைகளில்  பாசம் , அங்குசம்,புஷ்பபானம் போன்றவற்றை முறையாக தரித்தவளே.ஆசையை உண்டாக்கும் கரும்பு வில் மற்றும் மலர் பானங்களை கொண்டுள்ளவளும், இவளே உண்டாக்கிய ஆசையை தகுந்த கட்டுக்கோப்புடன் இருக்க தன்னுடனே அங்குசத்தை உடையவளாகவும் உள்ளாள். ஞானத்தினை கடந்து
 உள்ளம் இம்மை, மறுமை, புக்தி, முக்தி எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளிக்கவல்லவள். ஸ்ரீ ஆதி சக்தியை ஈஸ்வரன் தியானம் செய்து சகல சித்தியும் பெற்றுள்ள அர்த்தநாரீஸ்வரராக ஒரு மகா அவதாரத்தை ஏற்றுவித்தார். பிரம்மகாதி தேவர்களும் தேவி ஆதி சக்தியை தியானம் செய்து சித்தி பெற்றார்கள்.ஆக தேவி ஆதி சக்தியின் மந்திரத்தை உச்சரித்து மனதில் எண்ணி தியானம் செய்துவர சகல செல்வங்களும், தான் விரும்பும் சௌபாக்கிய வாழ்க்கையும் சந்தோசங்கள் எண்ணிலடங்கா கிடைக்கும் என்பது சித்தி பெற்ற ஞானிகளின் கூற்றாக உள்ளது. அன்னையின் அனுக்கிரகம் கிடைத்தால் கிரக தோஷத்திலிருந்தும் தெளிவு கிடைக்கும். ஏனெனில் ஒன்பது கிரங்கள் என்பது அவர்கள் தன மனம் போல் இயங்குவது இல்லை.இந்த ஒன்பது கிரங்களையும் தனது கட்டுப்பாடுடன் தனது கட்டளையின் பேரில் இயக்கம் செய்பவள்.நவகிரக நாயகி என்ற பெயரில் அன்னை ஆதி சக்தியானவள் ஓவ்வருவருக்கும் பரிட்சை பலனோடு விசேஷ பலனை அளிக்கவல்லவள்.

ஒன்பது கிரகங்களை வழிபடும் முறைகள், கிரக பகவான்களை மட்டும் வழிபட்டால் தனது கிரக தோஷம் முழுமையாக விலகுமா... ஒன்பதுகிரக தலங்களில் யாரை முக்கியமாக வழிபட வேண்டும்....

தொடரும் ...........

ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்.

நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்
Previous Post Next Post