பாலா தெய்வமாக என் மனதில் வாழ்க.
என்ற நற் சிந்தனையுடன் .....அருளே வடிவமாகவும் ஞானமே சொருபமாகவும் வீற்றிருக்கும் அன்னை ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ ஆதி சக்தியின் அருளாசியோடு குழந்தை வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாவின் துணையினாலும்
ஆத்ம ஞான மலர் ( ATHMA GNANA MALAR ) எனும் ஞான தொடர்
பாலா திரிபுரசுந்தரி அன்னையை அனுதினமும் தியானித்து
வணங்குவதால் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியம், செல்வம்,
ஞானம், பணப் புகழ் மற்றும் பலத்தை அருளுபவள்.
அன்னை பாலா திரிபுரசுந்தரி இளமையாக இருக்கும்போது
பாலா வாலை வடிவம் கொண்டவள்.. அவள் ஆற்றல் மிக்கவள்,
விளையாட்டுத்தனமானவள், வீரமானவள், கனிவானவள்.
அருணகிராநஜ்வாலா, ராஞ்சிதா, சவகாச,
வித்ருதஜபாவதிகா, புஸ்திகா பீதிஹஸ்தா,
இத்தரகரவரத்யா, புல்லக்கல்ஹராசம்ஸ்தா,
நிவசதுஹ்ருதிபாலா, நித்யகல்யனரூபா.
வற்றாத ஞானத்தின் அருளை அருளுபவள். மென்மையும் மிகுந்த
அழகும் கொண்ட பாலா,காலை சூரியனைப் போல சிவப்பு
நிறத்தில் இருப்பவள். தன்னுடைய பக்தர்களை ஒன்றிணைத்து
காத்து ரட்சித்து சகல செல்வங்களையும் அருளும் ஞான யோக
சொரூபிணியாக வெண்மையான தாமரையில் அமர்ந்து
இருப்பவள். ஒரு திருக்கரங்களில் ஜெப மாலைகளை
வைத்துக்கொண்டு தன்னை எண்ணி தியானிப்பவர்களின்
மனமும் எண்ணமும் எந்த வித தவறான சறுக்கு பாதைக்கு
செல்லா வண்ணம் காத்து , உயர்ந்த எண்ணங்களை
நோக்கியே மனம் அனைத்து சிந்தனைகளையும் செலுத்த ஒரு
கட்டுக்கோப்பான கோர்வையில் அதாவது தன் மனம் அனைத்தும்
ஒரு பிணைப்பில் அல்லது ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்
என்று ஒரு பிணைப்பு சுழற்சியில் வைத்திருப்பவள்.சரி நம் மனதை
யார் கட்டுக்கோப்புடன் வைப்பது, ஒருவன் தன்னுடைய மனதை
அறிவு சிந்தனை என்ற கட்டுப்பாட்டிற்கு மேல் ஒரு உள்ளார்ந்த
கட்டுப்பாட்டு பிணைப்பு பிடியில் வைத்திருந்தால் அவன் யோக
ஞான சக்தியை அடைவதோடு சகல வெற்றியை அடைகிறான்.
இப்படி தன் மனதை யார் கட்டுப்பாடுடன் வைக்கவேண்டும்
என்பதை ஒரு தனி கட்டுரையை காண்போம். இப்போது நாம்
சுற்றி வரக்கூடிய இந்த வாழ்க்கை சக்கரத்தில் ஞானவழிபாதையில்
ஒழுக்க நெறிமுறையில் மனதினை கட்டுக்கோப்புடன்
வைத்திருக்க தன்னுடனே ஜெப மாலையை அன்னை
வைத்துள்ளாள். இந்த ஜெப மாலைகளின் உதவியுடன் தியானம்
செய்பவர்கள் பல கோடி தவங்கள் செய்த வானவர்கள்
தேவர்களுக்கு இனங்காக அன்னையின் அருளை பெறுவார்கள்.
அன்னை பாலா மற்றொரு திரு கரங்களில் இம்மை மறுமை மற்றும்
அறியாமையை போக்கி ஞான ஜோதியின் சுடரின் பேரொளியாக
விளங்க செய்யும் கல்வியினை போதிக்கும் அழகிய புத்தகங்களை
வைத்துள்ளாள். மற்றொரு திருக்கரமானது தன் அறியா குண
சிந்தனையில் இருள் என்ற சூன்ய வலையில் தன் மனம்
சிக்கிக்கொண்டு துறு எண்ணம் மற்றும் தீய செயல்களுக்கு
வழி வகுக்காவண்ணம், நல்ல எண்ணங்கள் , நற்சிந்தனைகள்,
நன்னடத்தையுடன் யோக நிலைகளுடன் கூடிய நீண்ட ஆயுளையும்,
ஆரோக்கியம், செல்வம், ஞானம், பணப் புகழ் மற்றும் பலத்தை
அருளி காத்து ரட்சிக்கும் திருவருளை கொண்டவள் அன்னை பாலா.
மற்றொரு திருக்கரமானது சகல செல்வங்களையும் அருளும்
செல்வ சொரூபிணியாக லட்சுமி தேவியாக ஆசி அருள்கிறாள்.
இப்படி நான்கு திருக்கரங்களுடன் அழகிய முகத்துடன் ரத்தினம்
பதித்த முத்து கொண்ட சலங்கை கொலுசுடன் , மருதாணி சிவந்த
பிஞ்சு பாதங்களுடன் வெண்மை தாமரையில் அமர்ந்து அருள்
பாலிக்கின்றாள் அன்னை பாலா..
தொடரும் .....
ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்
நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்
