💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

ஸ்ரீ சக்தி தேவி வழிபாடு சித்த சுத்தி அடையும் முறை


முத்துக்களின் வெண்மையும் சங்கின் வெண்மையும் ஒத்த அலைகளை கொண்ட அமுத கடலில் கற்பக மரங்கள் சூழ்ந்து நிற்கும் கதம்ப வனத்தில், உயர் வகை இரத்தினங்கள்  பதித்த தூண்களை  கொண்ட சிந்தாமணி எனும் அழகிய மாளிகையில் அமர்ந்த அன்னையே சரணம் சரணம். சூரியன் ,சந்திரன்,அக்கினி மண்டலங்கள் கூடிய ஸ்ரீ சக்கரத்தின்  அமர்ந்துள்ள அன்னையே சரணம் சரணம்.. கைகளில் பாசம்,அங்குசம், கரும்பு வில், மலரம்புகள்கொண்ட அழகிய திருமுகம் கொண்டு பிறை மதியை தனது மணி மகுடத்தில் சூடிய அன்னையே உன்னையே வணங்குகிறேன்.


அன்னைக்கு அபிஷேகம்:
குங்கும பூ , சந்தனம் நிறைந்த நீரினால் அன்னைக்கு அபிஷேகம் செய்ய, குளிர்ந்த சுத்தமான கலச நீர் , இளநீர் , பச்சை கற்பூரம்,கொண்ட குளிர்ந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். தேன் ராசகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை நார்த்தம் பழம், இறுதியாக அன்னைக்கு மஞ்சள் நீராட செய்து , பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும்.. அபிஷேகத்து அன்னைக்கு செந்நிற ஆடையை அணிவித்து,முத்துக்கள் நிறைந்த மணி மாலைகள் சூட்ட வேண்டும்.

கடகம் வாகுவளையம், கங்கணம், பாதாங்கிணி, மணிகுண்டலம் ,மகுடம்,முத்து முக்குத்தி , பில்லாக்கு பொன்மோதிரம் சூடாமணி , இடையணி, முதலியவற்றை அணிகலன்களாக அணிவிக்கவேண்டும்.சில அணிகலன்கள் அன்னைக்கு அணிவிக்க இயலாமல் போகும் போது அன்னைக்கு மானசீகமாக அன்னைக்கு அணிகலன்களை அணிவிக்கிறேன் என்றும் அணிவிக்க வேண்டும்.


தன்னால் முத்து மாலையும் இரத்தின அணிகலன்களும் வைரம் பதித்த மூக்குத்தியும்,மணிமகுடம் அணிவிக்க முடியவில்லை எனில் அணிவிக்கக்கூடிய அணிகலனை உயர்ந்த இரத்தின அணிகலன்களாகவும், முத்து மாலைகளாகவும்,மலர் மகுடத்தை ரத்தினம் பதித்த மணி மகுடமாகவும் எண்ணி அன்னைக்கு அணிவிக்கலாம். அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட அன்னைக்கு, மஞ்சள் , குங்கும பூ சந்தனம் மேல் பூச்சாக பூச வேண்டும்.அன்னைக்கு பலவித மலர்களால் மாலைகள் இட்டு அலங்காரங்கள் செய்ய வேண்டும்.
செங்கழுநீர், நீலோத்பலம்,மல்லிகை ,மருக்கொழுந்து, தாமரை,ஜாதி மல்லிகை ,முல்லை ,மகிழம்பூ ,தாமரை ,மந்தாரை மலர்களால் தங்களுடைய ஆழ்ந்த மனதிலிருந்து வெளிப்படும் வகையில் சங்கல்பம் வைத்து அர்ச்சித்து வணங்க வேண்டும்.
மஞ்சள் அரிசி, (அட்சதை), குங்குமம், மஞ்சள்பொடியால், அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.மூலிகை இலைகளால் அன்னைக்கு அர்ச்சித்து திரா நோய்க்கு மருந்தாக உட்க்கொள்ளலாம். கண்களுக்கு கண் மை இட்டு அன்னைக்கு கண்ணாடியை காண்பிப்பதுவை வியந்த வழக்கமாக கொள்ளவேண்டும். பல வகையான வாசனைப்பொருட்கள்,மருத்துவ மூலிகை பொருட்களும் , தசாங்கம்,குங்கிலியம்,போன்றவற்றை கலந்து தூபம் கட்டவேண்டும்.

நைவேத்தியங்கள்:
பொற்பாத்திரத்தில் பசுவின் நெய் பருப்பு,கறிவகைகள் கொண்டு சமைக்கப்பட்ட உணவும்,புளி அன்னமும்,சித்ரான்னமும் (எலுமிச்சை அன்னம்),தேன் ,பால்சோறு ,பலவிதமான பழங்கள்,வடை,பருப்பு பாயசம் முதலியவற்றை மாணிக்க பாத்திரத்தில் நைவேத்யமாக சமர்ப்பிக்கவேண்டும்.குங்கும பூ, கற்கண்டு,கொண்ட உயர்ந்த செந்மஞ்சள் நிற பாலை அன்னைக்கு பருக அளிக்க வேண்டும்.
வெற்றிலை, வாசனைப்ப்பாக்குகள், பச்சைக்கற்பூரம் முத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணம் முதலியவற்றை ரத்தினத்திலான வெற்றிலை பேழையில் அன்னைக்கு அளிக்க வேண்டும்.பாட்டு, தாளமேளம்,முதலியவற்றுடன் அன்னைக்கு கற்பூர தீபம் ஏற்றப்பட வேண்டும்.கற்பூர தீபம் ஆனது அன்னையின் உயர்ந்த மணிமகுடம் முதல் பாதம் வரை காண்பிக்கவேண்டும்.

லெட்சுமி தேவி குடைபிடிக்க இந்திராணியும், இரதியும் சாமரம் வீச,சரஸ்வதி வீணை வாசிக்க,தேவ மகளிர் நாட்டியம் ஆட,இசையுடன் கூடிய பாட்டு அன்னைக்கு தேவர்களால் சமர்ப்பணம்  செய்யப்படும்.


ரிங்கார மந்திரத்தால் உபாசிக்கப்படுவளே
வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே
என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகும்
என் சஞ்சாரங்களெல்லாம் உனக்கு பிரதட்சணமாகவும்
நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரமாக இருக்கட்டும்.






இந்த வழிமுறையில் மந்திர அட்சர மாலையினால் அன்னையை யார் துதிக்கின்றார்களோ அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள் அவர்கள் மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்,வாக்கில் சரஸ்வதியும்,அவர்களின் இல்லங்களில் லட்சுமி வாசம் செய்வாள்.
அன்னை சக்தி தேவியை ஆலயம் மற்றும் சிறப்பு பூசை யாக எப்படி வழிபடுவது...
 வீட்டில் அன்னை ஸ்ரீ சக்தி தேவி மற்றும் பாலாவை எப்படி வழிபடுவது...

தொடரும் .....

ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்
நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

Previous Post Next Post