அன்னை பாலாவை வீட்டில்
வழிபடும் முறை
அழகின் அம்சமான குழந்தை
வடிவிலான அன்னை பாலாவின் திரு உருவம் அல்லது திரு உருவ படத்தினை இல்லத்தில் வைத்து ,தூய நீர் ,பன்னிர் கொண்டு சுத்தமாக துடைத்து சிறந்த சந்தனம் குங்குமத்தால்
பொட்டிட்டு , வாசனை நிறைந்த பல வண்ண மலைகளால் அலங்கரித்து,
பதிக்கம் கொண்ட ஐந்து
வரிசை மணி மலை அல்லது மூன்று வரிசை மணிமாலை, குஞ்சம் வைத்த ஜடை பின்னல் நெற்றியில் பிறை மற்றும் நெற்றிசூடி
கால்களுக்கு அழகிய சலங்கை கொலுசு (மானசிகமாகவும்)
அணிவித்து தூய எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி
சுத்தமான பசுவின் பாலில் காய்ச்சி அதில் கற்கண்டு, தேன்,ஏலக்காய் பொடி ,குங்கும பூ இட்டு ஒரு தம்ளரில் அன்னை
பருகுவதற்க்காக வைக்கலாம். பின் தங்கள் இல்லத்தில் உள்ள குழந்தை மற்றும் அருகில் உள்ள
குழந்தைகளுக்கு அளித்துவிட்டு நாமும் பருகலாம். சர்க்கரையுடன் கூடிய பொறி,
அவல் , பொட்டுக்கடலை,கற்கண்டு, பேரிச்சம் பழம் விதைகள் நீக்கி , பழங்கள் சிறு
துண்டுகளாக நறுக்கி . முக்கியமாக குழந்தைகள் விரும்பும் திண்பண்டங்கள் வைக்கவேண்டும் ,கடலை மிட்டாய் எள் மிட்டாய் முறுக்கு வகைகள் , இனிப்பு வகைகள் வைத்து அதை குழந்தைளுக்கு அளிப்பதால்
அன்னை பாலா மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள்.
நைய்வேத்யமாக வெல்லம் கலந்த பருப்பு பாயசம் , உளுந்துவடை, பால் சோறு , நெய் சாதம் வைக்கலாம் . ஒன்பது வயது குழந்தை அணியும் அல்லது தங்கள் வீட்டில் உள்ள குழந்தை உள்ள வயதிற்கு ஏற்ப பாவாடை , சட்டை வளையல், குங்குமம், வண்ண பொட்டு வகைகள் குஞ்சம்
வைத்த ஜடை பின்னல் மை பொட்டு,அன்னைக்கு
இடுவதற்காக மருதாணி அரைத்த விழுது,
பாவாடை சட்டையை தங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு அணிவிக்கலாம். அதேபோல் மருதாணியும் குழந்தைகளுக்கும்
நாமும் வைத்துக்கொள்ளலாம்.
ஐம்
கிலீம் சௌம் என்ற மந்திரத்தை மூன்று பீஜ மந்திரம்
என்று கூறுவார்கள்.இதுவே அன்னையின் மூல மந்திரம்.இதை மானசீகமாகவும் தியானம் செய்யலாம்.
ஐம் கிலீம் சௌம் என்ற மந்திரத்தை 108 முறை கூறி வாசனை மலர்கள்,தூய மஞ்சள்,மஞ்சள் அரிசி,குங்குமத்தால்
அர்ச்சனை செய்ய தான் விரும்பிய வரங்களை அளிப்பவள்.
தாங்கள்
செய்யும் அலங்காரம், ஆராதணை ,பூஜை முறைகள், நைவேத்தியம்,அன்னை விரும்பும் தின்பண்டங்களை
கண்டு மனமகிழ்ந்து.
லலிதையின்
சகஸ்திர நாமம் கூறுவதினாலும்
தங்கள்இல்லத்திற்கு சலங்கை ஒலியுடன் ஓடோடிவருவாள்.
சலங்கை கொலுசு சப்தம் கேட்கும் என்பது ஐதீகம்.




