அன்னை ஏன் சதாசிவன் மேல் அமர்ந்துள்ளாள் ?
https://www.youtube.com/channel/UCxiM89zMpweWLsRKI1PmsFQ
அன்னை ஆதிசக்தி ஆனவள் இந்த அகிலத்தை படைத்தது காத்து ரட்சிபத்தோடு இந்த அகிலத்தில் உள்ள எல்லா உயிரினங்களையும் கட்டி காத்து ஆட்சி செய்கிறாள்.இப்படி அண்டசராசரத்தில் அன்னையானவள் உயர்ந்த ரத்தினங்களான சிந்தாமணி ரத்தினங்களை பதித்த சிந்தாமணி மாளிகையில் அக்னி மூலை தொடக்கமாக பிரம்மா , விஷ்னு ,ருத்ரன் ,ஈஸ்வரன் நான்கு கால்களாகவும் சதாசிவன் மஞ்சள் விரிப்பு பலகையாகி அன்னை அமர்ந்துள்ளாள்.
இப்படி அன்னை உலகினை படைத்து காத்து அழிக்கும் தொழில் செய்பவர் மேல் ஏன் அமர வேண்டும். அதாவது அன்னை ஆனவள் ஏன் சதாசிவன் மேல் அமர்ந்து இருக்கிறாள்.ஐந்து தேவ சக்திகள் மேல் ஆட்சி அதிகாரத்தோடு அன்னை ஏன் அமர்ந்திருக்க வேண்டும். இதில் ஐந்து தேவ சக்திகள் என்பதை இந்த பிரபஞ்சம் மற்றும் நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் .
பிரபஞ்சம் மற்றும் நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களின் ஆட்சி பரிபூரணமாக அன்னை உள்ளாள் என்பது தெய்வீக கூற்று.
ஆகாயம்,காற்று நெருப்பு ,நீர்,மண் இந்த பஞ்ச பூதங்கள் பரமாணுவில் தொடங்கி பல உயிரினங்களில் உள்ள உணர்வு ,ஒலி,ஒளி,சுவை,மணம் எனும் ஐந்து குணங்களும் உள்ளதை நாம் அறிவோம்.உணர்வு என்பதை இயக்கமும் , அழுத்தம் ஏற்படும் இடமான ஆகாயமாக இருக்கின்றது. ஒலி உண்டாகும் இடத்தை காற்று என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு என்றும்,சுவை உண்டாகும் இடத்தை நீர் என்றும்,மணம் உண்டாகும் இடத்தை மண் என்றும் ஓப்பாக கூறலாம் .
# ஆகாயம் --->தலைபாகம் (ஆகாயம்)--->
# ஆக்ஞை
# காற்று ----->கழுத்து (காற்று)--->
# விசுத்தி
# நெருப்பு -------->இருதயம் (நெருப்பு) --->
# அநாதகன்
# நீர் -------------->தொப்புள் (நீர்) ----->
# மணிபூரகம்
# மண் ------------>வயற்றில் (சுக்கில
சுரோணிதஇடம்)---> # சுவாதிஷ்டானம்
பூமியில்எப்படிநீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம்ஆகியஐந்துசக்திகள்ஒன்றைஒன்று
ஈர்த்துபூமியாகிசெயல்படுகிறதோஅதே
போல்இந்தஉடலில்கீழ்கண்டவாறுபஞ்சபூத
சக்திகள்செயல்படுகின்றன.
1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம்
, மாச்சர்யம்
2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல்,
எழுதல் , ஓடல்
3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம்,
புணர்ச்சி
4) நீர் – உதிரம், மூளை , உமிழ்நீர், கொழுப்பு,
சுக்கிலம்
5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு,
தசை
பூமியின்இயக்கத்திற்குஇரவு,பகல்மாறி
மாறிசூரியசந்திரர்கள்செயல்படுவதால்
பூமியின்செயலும், ஜீவராசிகளும்
வாழ்கின்றன .
அதேபோலமனிதஉடலானபிண்டத்திலும்
இடகலைஎன்கிறசூரியகலையும், பிங்கலை
என்கிறசந்திரகலையும்மாறிமாறிசுவாசம்
நடைபெறுவதால்மனிதபிண்டம்
இயங்குகிறது.
பூமியில் 12 மணிநேரத்திற்குஒருமுறை
இரவும்பகலும்மாறிமாறி
செயல்படுவதுபோல்இந்தமனிதஉடலில்
சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு
மணிநேரத்திற்குஒருமுறைமாறிமாறி
செயல்படும்.
ஆகவேமேற்கண்டவிளக்கத்தின்மூலம்எந்த
சூரிய, சந்திரன்ஆற்றல்பூமியை
இயக்குகிறதோஅதேஆற்றல்தான்இந்தமனித
உடலையும்இயக்குகிறதுஎன்பதைப்புரிந்து
கொள்ளலாம்.
பிண்டத்தில் (உடலில் ) நவகிரகசெயல்பாடு ...........................தொடரும் ......
ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்
நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்