💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

சக்தி அவதாரங்கள்


சக்தி அவதாரங்கள் 




 சக்தி வழிபாட்டில் மிக முக்கியமான பரிவார தேவதைகளாக விளங்குபவர்கள்தான் 64 யோகினிகள் என்ற அன்னையின் உடல் பாகங்களிலிருந்து தோன்றிய சக்திகள். இவர்கள் 64 கலைகளின் குறியீடுகளாக காண்பவர்களும் உண்டு. இவர்களை வணங்கி வழிபடுபவர்களுக்கு எந்தப் பிணியும் வராது காக்கும் வல்லமை படைத்தவர்கள் இவர்கள். இந்த 64 யோகினியரில் எட்டுப் பேருக்கு ஒன்று என்ற வகையில் உருவம் கொடுத்து “அஷ்ட மாத்ருகா’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அந்த அஷ்ட மாத்ருகா வழிபாடே நாளடைவில் சப்த கன்னியர் அல்லது சப்த மாதர்கள் என்ற பெயரில் மருவி ஏழு அன்னையர்களாக மாறி விட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட சில தகடுகளில் ஏழு அன்னையரின் உருவம் பொறிக்கப்பட்டத் தகடுகளும், காசுகளும் இருந்தன என்பது இந்த வழிபாட்டின் தொன்மையை நமக்கு நன்கு விளங்குகிறது.

பொதுவாகவே இந்த 64 யோகினி வழிபாடு டாகினி என்றழைக்கப்படும் தாந்திரீக வழிபாடுகளின் முன்னோடியாகும். இந்த யோகினியர் தோன்றிய கதை மிகவும் அழகானது தேவி மஹாத்மியம் அதை சுவைபடக் கூறுகிறது.







பன்னெடுங்காலம் முன்பாக கம்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் இருந்தார்கள். அவர்கள் அழிப்பவர்களே இல்லாத நிலையில் அவர்களின் அட்டகாசங்கள் மிக அதிகமாயின. குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் அவர்கள் மிகவும் துன்புறுத்தினார்கள். மும்மூர்த்திகளும் செயலற்ற நிலையில் இருந்தனர். என்ன செய்ய? அந்த நேரத்தில் மக்களுக்கு யார் காவல்? அப்போது அனனை ஆதி பராசக்தி கண் மூடி மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். தேவரும் மூவரும் மனிதரும் அவளை அண்டி வேண்டினர். “லோக மாதாவே! எங்கள் எல்லோரிடமும் மூச்சுக்காற்றாக இருப்பவளே! குண்டலினி சக்தியாக எங்களுள் நிறைந்திருப்பவளே! எங்களைப் பாராய்! எங்களைக் காக்க மனம் இரங்காயோ’வெனக் கதறினர். குழந்தைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னையால் தாங்க முடியுமா? கண்கள் மலர்ந்து சும்ப, நிசும்பர்களை சம்ஹாரம் செய்வதாக வாக்கு கொடுத்தாள் அன்னை.
வீறு கொண்டு எழுந்தாள். தன் உடலை ஒவ்வொரு பாகத்திலிருந்தும் 64 பேரைத் தோற்றுவித்தாள். அதில் மேல பாகங்களிலிருந்து உருவான எட்டு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களை அந்த 64 பேருக்கும் தலைவியாக்கினாள். மற்றவர்கள் அந்தத் தலைவிக்கு பணி புரிந்தார்கள். ஒவ்வொரு தலைவிக்கும் தங்களுடைய திவ்ய சக்தியை தெய்வங்கள் வழங்கின.

பிரம்மனின் சக்தி பெற்றவள் பிராம்மணி என்றும், மஹாவிஷ்ணுவிடமிருந்து சக்தி பெற்றவள் வைஷ்ணவி, மஹேஸ்வரரிடமிருந்து சக்தி பெற்றவள் மாஹேஸ்வரி, இந்திரனிடமிருந்து சக்தி பெற்றவள் இந்திராணி, முருகனிடமிருந்து சக்தி பெற்றவள் கௌமாரி, வராஹப் பெருமானிடமிருந்து அருள் பெற்றவள் வாராஹி, நரசிம்மரின் உக்கிரகத்தைப் பெற்றவள் நாரசிம்ஹி என்றும், வினாயகரிடமிருந்து சக்தி பெற்றவள் விகடானனா என்றும் அழைக்கப்பட்டனர். இந்த எட்டுத் தலைவிகள் கீழும் எட்டெட்டுப் பணிப்பெண்களாக மொத்தம் 64 யோகினியர் விளங்கினர்.




  1. லகு

  2. லலிதம்

  3. லக்ஷணம்

  4. லட்சியம்

  5. லயம்

 

1.லகு :

இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன. ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் – எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள்.

(ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.)

மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது.

பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன.

அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ. அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம்.

  1. லலிதம்:

லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது.

லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் – சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல – அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும்.

  1. லக்ஷணம்:

அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள், ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது.

லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது.

இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம்.


  1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்)

  2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.)

  3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம:

மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும். அது, ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ


  1. லட்சியம் :

அம்பிகையிடம் – வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை.



5.லயம் :

லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன.

உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது.




நன்றி  
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம் 
பில்லூர் 
9500450619
Previous Post Next Post