பகளாமுகி மூலமந்திரம்:-
ஓம் ஹ்ர்லீம் பகலாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பம் ஜிஹ்வாம் கீலய புத்திம் வினாசய ஹ்ர்லீம் ஓம் ஸ்வாஹா
(ஹ்ர்லீம் என்பதை ஹ்லீம் என்றும் ஜெபிப்பார்கள்)
மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சித்து வழிபடவும்.
வழக்கு,தர்க்கம்,வாதம் போன்ற சூழ்நிலைகளில் முறைப்படி இவள் மந்திரம் ஜெபித்து வேண்டிக்கொண்டு செல்ல.வெற்றி உண்டாகும்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்+சனி சேர்க்கை,செவ்வாய்+ராகு சேர்க்கை, செவ்வாய் நீச்சம் போன்ற அமைப்பு இருந்து அதனால் பாதிப்புகளை அனுபவித்து வருபவர்கள் இந்த அம்பாளை வணங்கி வருவதன் மூலம் கெடுபலன்கள் குறைந்து நலம் பெறலாம்.
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ல
அம்பிகையே! நானாவித ரத்தினங்களால் ஆக்கப்பட்ட திவ்ய பவனத்தில், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தூண்களில் மாலைகளைப்போல், தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. தங்கத்தினாலான பெண் பதுமைகள், தீபத்தை இரு கைகளாலும் ஏந்தி உன் பவனத்தை ப்ரகாசிக்க செய்துகொண்டிருக்கின்றனர். இந்த தீபங்களனைத்தையும் பசு நெய் ஊற்றி, தீபமேற்றுகிறேன் தாயே பர்வத புத்ரீ. இவையெல்லாம் உனக்கு சந்துஷ்டியை நல்குவதாக, ஏற்றுக்கொள் அம்பிகையே.
ஸாதகன், தனது மல்ங்களான வேட்கை (LUST), கோபம் போன்ற “ரஜோகுணத்தை” நெருப்பிலிட்டு பொசுக்கி, சுத்தமான, நறுமணமுள்ள ஆத்மனை அம்பிகைக்கு தூட்பமாக அர்ப்பித்ததை அனுபவித்தோமல்லவா! இங்கு ஸாதகன், அம்பிகைக்கு, பசுவின் நெய்யால் ஆன தீபங்களை அற்ப்பிக்கிறான். பசுவின் (கோ) கிடைக்கும் எல்லாப்பொருளுமே பவித்ரமாக கருதப்படுகிறது, மந்திர உச்சாடனத்தோடு, பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் கலந்தது பன்சகவ்யமாகும். இது, சேவித்தவரின் பாவத்தையெல்லாம் பருகியவுடன் நிவர்த்திக்கிறது என்கின்றன வேதங்கள்.
அம்பிகை ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியின் இருப்பிடத்தைப் பற்றி “பாகம் 1”ல் கண்டிருந்தோம். அந்த மஹா மண்டபத்தில் எவ்வளவு தீபமேற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே வெளிச்சம் இருக்கும், ஆயின், அம்பிகையின் பவனமோ ரத்தினங்களால் ஆனதன்றோ!, ஆகையால், ஒளிரும் விளக்குகளின் ஒளியை ரத்தினங்களும் பிரதிபலிக்கின்றன. ஆதலால், மண்டபமே ஒளிமயமாக இருக்கிறது.
முன்னமே பார்த்தபடி மண்டபம், தீப தோரணங்களாலும், தீபமேந்திய தங்க பதுமைகளாலும் ஒளியூட்டப்படுகிறது. அவ்வொளியாலும், அவ்வொளியின் பிரதிபலிப்பாலும் அம்பிகையையும், அம்பிகையின் மண்டபத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், ஸாதகன், ஒன்றை தெரிந்துகொள்கிறான். அது என்னவென்றால், ஒளியேயான அம்பிகை இல்லேல் ஒளியேது? என்று. இதையே நாம், “ப்ரகாஸ விமர்ஷ மஹாமாயா ஸ்வரூபிணி” என்கிறோம்.
இது கதா உபனிஷத்தில் விரிவாக உறைக்கப்பட்டுள்ளது. இதில் (II.ii.15) ப்ரம்மத்தின் முன் சூரிய, சந்திர, நக்ஷத்திர, மின்னல் உள்பட எவரும் ஜ்வலிப்பதில்லை, ப்ரகாசிப்பதில்லை, எல்லாம் ப்ரம்மத்தின், ப்ரம்ம தேஜஸான ஒளியின் பிரதிபலிப்பே என்று.
இந்த வெளிச்சமாவது, ஸாதகனின், அகக்கண்ணை திறக்கிறது. இங்கு, ஸாதகனுக்கு, அம்பிகையை, அம்பிகையின் ரூபத்தை, மனதில் ஸ்மரித்தாலே போதுமானது, அம்பிகையை தவமிருந்து அடைய வேண்டியதில்லை என்று. ஆம், ஸ்மரணையிலே சித்திக்கும் தாயிடம் தவமிருத்தல் வேண்டுமோ! இத்தருணம், அம்பிகை, ஸாதகனின் உள்ளத்தில் ஒளிர்ந்து, ஸாதகனை அளவிலா பேரின்பத்தில் ஆழ்த்துகிறாள்.
ஸ்ரீ பகளாமுகியம்பா : 1
பரப்ரஹ்ம்ம வஸ்துவான பராஶக்தியின் பரமோத்க்ருஷ்டமான ரூபங்களில் மஹோன்னதமானது தஸவித்யா ஸ்வரூபம் ஸாக்ஷாத் பரமேச்வரராலும் உபாஸிக்கப்பட்டதால் தஶவித்யைகளே மஹா வித்யைகள் என்று தாந்த்ரங்கள் வர்ணிக்கின்றன
இதிலும் ஒவ்வொரு தந்த்ரக்ரமத்தில் மஹா வித்யைகளில் பேதங்களுமுண்டு கால்யாதி கமலாத்மிகா பர்யந்தம் ஒவ்வொரு தேவீக்கும் தனிதனியாக உபாஸனா குலங்களும், பத்ததிகளும் உண்டு
அப்படி இந்த தஶமஹாவித்யைகளில் அதிவீர்யமான வித்யை "ஸ்ரீ பகலாமுகி வித்யை" தாந்த்ரீகத்தில் இந்த வித்யைக்கு "ப்ரஹ்ம்மாஶ்த்ர வித்யை", "பரப்ரஹ்ம்மாஶ்த்ர வித்யை" என்ற நாமங்கள் ஸ்ரீ பகளாம்பாளை விதிவத்தாக தீக்ஷாக்ரமத்தோடு உபாஸிக்க வேணும்
அதுமாத்ரமில்லாமல் மஹாவித்யா ஸம்ப்ரதாயத்தில் ஒருமஹா வித்யைக்கு மற்றசில வித்யைகள் அங்க தேவதைகளாக வருவதால் அந்த வித்யையையும் சேர்த்து உபாஶித்தாலே நமக்கு பூர்ணபலன்
அப்படி ஸ்ரீ பகளாம்பாளுக்கு ப்ரதனமாக உள்ள வித்யையே "ஸ்ரீ உக்ரதாரா வித்யை," ஸ்ரீ பகளாம்பாளை ஒருவன் உபாஸிக்க வேணுமானல் அவன்முதலில் "ஸ்ரீ உக்ர தாராம்பாளை" உபாஸித்த பின்னர் உபாஸித்தால் தான் பரிபூர்ண பலன் என்பது தந்த்ரங்களின் துணிபு
அதிலும் ஸ்ரீ வித்யை போல் மஹாவித்யோபாஶனையிலும் பூர்ணதீக்ஷா விதிப்ரகரணங்களும் உண்டு இங்கு எப்படி மஹா கணபதியில் தொடங்கி மஹா ஷோடஷியில் மந்த்ரங்களானது பூர்த்தியாகிறதோ
அதேபோல மஹா வித்யோபாஶகர்களுக்கும் மந்த்ர க்ரமங்களும், உபாஸனா க்ரமங்களிலும் ஆயிரமாயிரம் பேதங்களுண்டு
அதில் ப்ரதானமான ஸ்ரீ பகளாமுகியை உபாஸிக்கும் ஸாதகன் "ஹரித்ரா கணபதி" முதல் "ப்ரஹ்ம்மாஸ்த்ர காயத்ரீ," "ஷட்த்ரிம் ஷடாக்ஷர " மூலவித்யையுடன் ஸ்ரீ மஹாவித்யா பகளாமுகியம்பாளின் உபாஸனா மந்த்ர க்ரமம் முடிவுற்று பூர்ணதீக்ஷையாகிறது
இதோடு பஞ்சாம்னாயங்களில் வரும் முப்பத்திரெண்டு வகையான பகளாமுகியம்பாளின் மந்த்ர பேதங்களையும் ஸாதகன் தவறாமல் உபாஸித்தாலே பலன் இந்த அங்கதேவதைகளுக்கு அஸ்த்ர மந்த்ரங்களாக
பஞ்ச ஸ்தம்பினிகளாக பகளாமுகியானவள் உபாஸிக்கப்படுகிறாள் .
1. ரணஸ்தம்பினி (படபாமுகி)
2. புவனத்ரய ஸ்தம்பினி ( உல்காமுகி)
3. தேவதா ஸ்தம்பினி ( ஜாதவேதமுகி)
4. த்ரிமூர்த்தி ஸ்தம்பினி (ஜ்வலாமுகி)
5. பரவித்யா ஸ்தம்பினி ( ப்ரஹத்பானு முகி)
என அதிரஹஸ்யமாகவும் உபாஸிக்கப்படுகிறாள்!!
இந்த மந்த்ரங்களை ஸாதகன் கோப்யமாக ஸ்ரீ குருநாதரின் ஆக்ஞையுடன் உபாஸிக்க வேணும் ஏனென்றால் அணுமுதல் ஸாக்ஷாத் பரமேச்வரர் வரை அத்துனை பேரையும் ஸ்தம்பிக்க வைக்கும் மஹாஶ்த்ர மந்த்ரமே ஸ்ரீ பகளாமுகி மந்த்ரம்
வைகாச அமாவாஸ்யையிலிருந்து நவமி/ பெளர்ணமி வரையில் ஸ்ரீ பகளாமுகி நவராத்ரீ/ பக்ஷம் கொண்டாடப்படுகிறது, அப்படி அந்த மஹா ராத்ரீகளில் இந்த ராத்ரீ (ஸுத்த அஷ்டமி) உபாஸிக்க பராம்பாள் ப்ரீதியாவதோடு ஸாதகனுக்கு பரமானுக்ரஹத்தை வர்ஷிக்கிறாள்!!
இந்த நாளில் தான் தேவீ ஸ்ரீ பகளாமுகி எனும் நாமத்தோடு ஹ்ரண்யமயமான வர்ணத்தோடும் பீதாம்பர வஸ்த்ரத்தோடும் ஸர்வலாங்கார பூஷிதையாக ஆவிர்பவித்தனள்
ஸ்ரீ பரமேச்வரர் பஸ்மாஶூரனிடமிருந்து விடுபட வில்வ வ்ருக்ஷத்தினுள் இருந்து ஸ்ரீ பகளாம்பாளின் மஹாமந்த்ரத்தை ஜபித்த பலனால் தான் மஹாவிஷ்ணு மோஹினி அவதாரம் கொண்டு பஸ்மாஸூரனை நிக்ரஹம் செய்தனள் என்பது தாந்த்ரங்களின் துணிபு
அப்படி ஸ்ரீ வித்யோபாஸகன் ஸ்ரீ பகளாம்பாளை உபாஸிக்க வேணுமெனில் பதினைந்து பகளாதிதிநித்யா தேவதைகளையும் இந்த பஞ்சப்ரயோஹம மஹா மந்த்ரத்தையும் உபாஸித்தால் பலன் உண்டு
ஸ்ரீ சக்ராம்னாயத்தில் தக்ஷிணாம்னாய க்ரமப்படி ஏகாக்ஷரீ, தக்ஷிணகாலீகா, ஏகதஶாக்ஷரீ முதலானவற்றையும் ஸமஷ்டியாத ஸர்வாம்னயக்ரமமாக ஊர்த்வாம்னாய நிர்வாண பாதுகைவரை ஸாதகன் விதிவத்தாக உபாஶனாதி பூஜைகள் செய்ய அவனே ஸாக்ஷாத் பகளாமுகி ஆகிறான்
ஸ்ரீ அபராஜிதா, ஸ்ரீ ச்யாமா, ஸ்ரீ ஸ்தம்பன த்வரிதா என த்ரிஸந்த்யையிலும் தேவீயை த்ரிஸ்வரூபத்தில் த்யானித்து தாந்த்ரீக ஸந்த்யாவந்தனாதி ஸபர்யாக்களால் உபாஸிக்க பரதேவதை ப்ரீதியடைவது ஸத்யம்
இன்னுமாயிரம் மாயிரம் உபாஸனா ரஹஸ்யங்களுண்டு பகளாமுகிக்கு அதை ஸ்ரீ குரு நாதரின் மூலம் அறிந்து கொள்வதே உசிதம்!!
ஸ்ரீ ஸ்தம்பின்யை நம:
ஸ்ரீ காமாக்ஷ்யை நம:
ஜய ஜகதம்ப ஸிவே
ஜய ஜய காமாக்ஷி