பஞ்சப்ரேத மஹாமஞ்சத்தின் மீது "சசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஶேவிதா" எனும் ஸஹஸ்ரநாமத்தின் வாக்யப்படி ஸரஸ்வதியும், லக்ஷ்மியும் சாமரம் வீச அங்குச பாச இக்ஷூகோதண்ட பஞ்சபாணத்துடன் திகழும் ப்ரஹ்ம்ம வித்யா ஸ்வரூபிணி
தமிழகத்தில் அநேகக்ஷேத்ரங்களில் "ஶக்திலிங்க" ப்ரதிஷ்டையும் உபாஸனா க்ரமங்களுமுண்டு, அதன்படி ஶக்திலிங்க க்ஷேத்ரங்களில் இது ப்ரதான க்ஷேத்ரம்!!
ப்ருதிவியிலிருந்த ஸதாஶிவ தத்வம் வரை தானேயிருப்பதால் ப்ருதிவியையே பீடமாக கொண்டு ஸர்வதத்வ ஸ்வரூபிணியாக விளங்கும் ஸ்தானமே கெளரீ மாயூரம்!! ஸ்ரீ வித்யையில் ஸ்ரீ மந் மாலினி மந்த்ராக்ஷரங்களின் அபர ரூபமும், அதற்கு அதிதேவதையும் ஸாக்ஷாத் அபயப்ரதாம்பாளே
காலவ மகரிஷியால் ஏற்ப்பட்ட ஸாபத்திலிருந்து ரக்ஷித்து நவக்ரஹங்களுக்கும் அபயம் கொடுத்ததால் இவள் "அபயப்ரதாம்பிகை"
கர்பகுலார்ணவ தந்த்ரத்தில் ஸ்ரீ தேவீ கூறுவாள்: ஓ!! மஹாதேவ.. கணங்களாகவும், க்ரஹங்களாகவும் நக்ஷத்ரங்களாகவும், யோகினிகளாகவும், ராசிகளின் ஸ்வரூபத்திலும், ஸப்த கோடி மஹாமந்த்ரங்களின் ரூபமாகவும், ஏகபஞ்சாசத் மாத்ரூகாபீட வடிவங்களாகவும் ப்ரஹாஸிப்பவள் யாமே..!! எம்மை உபாஸிக்க நீர் ஒருவரே தகுதியானவர்!!
அதன்படி இந்த க்ஷேத்ரத்தில் தான் தேவீயானவள் கணேசாதி மாத்ரூகாபீட பர்யந்த ஸகலதேவதா ஸ்வரூபங்களில் ஜ்வலிக்கிறாள்
ஸர்வஶித்திகரீ ஸ்தவத்தின் அதிதேவதை ஸாக்ஷாத் ஸ்ரீ அபயப்ரதாம்பாளே!!
தந்த்ர க்ரமத்தில் ஸாக்ஷாத் ஸ்ரீ ஶாம்ப பரமேச்வரரான மஹா தேவரும், அனங்க பட்டாரகரான மன்மதனும் பூஜித்த சரித்ரமும் உண்டு
ஸ்ரீ காஞ்சி காமாக்ஷ்யம்பாளே ஸ்ரீ லலிதா பராபட்டாரிகை, மதுரை ஸ்ரீ மீனாக்ஷி ஸ்ரீ மஹா ச்யாமளா, ஜம்புகேச்வரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியே ஸ்ரீ மஹா வாராஹி, மத்யார்ஜுனம் ஸ்ரீ ப்ருஹத்ஸுந்தர குஜாம்பாளே ஸ்ரீ மஹா ஸம்பத்கரீ அந்த வரிசையில் மாயூரம் ஸ்ரீ அவயாம்பாளே ஸ்ரீ மஹா அச்வாரூடா என்ற கருத்தும் உண்டு
தேவேந்த்ரன், மன்மதன், கணபதி,துர்வாஶர், அகஸ்த்யர், லோபாமுத்ரா, அம்பரீஷர், ஸ்ரீ பரமஶிவ பட்டாரகர் முதலியோர்களால் மஹா ஷோடஶவாரண க்ரமத்தில் ஸ்ரீ யந்த்ர பிந்து மத்யத்தில் ஏகாக்ஷர பராபட்டாரிகா ஸ்வரூபத்தில் உபாஸிக்கப்பட்டவளே ஸ்ரீ மத் அபயப்ரதாம்பாள்
அஞ்சு முகத்தி நவமுகத்தி
ஆறு முகத்தி சதுர்முகத்தி
அலையில் துயிலும் மால்முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
பாசாங் குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி
பாரத் தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
கருணா கரத்தி தவகுணத்தி
கயிலா சனத்தி நவகுணத்தி
காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
மதுரச் சிவத்தி மங்களத்தி
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அஞ்சு முகத்தி -- ஸத்யோஜாதாதி பஞ்சமுகங்களை கொண்ட ஸ்ரீ ஶாம்ப பரமேச்வரரின் ஸ்வரூபமாக "ஶிவமூர்த்தி" எனும் பதத்தினில் விளங்குவதால் இவள் "அஞ்சுமுகத்தி"
நவமுகத்தி -- பஞ்சதஶாக்ஷரீ மஹா மந்த்ர ஸமஷ்டியாக விளங்குவது "நவாக்ஷரீ" அந்த நவாக்ஷரீ மந்த்ரத்தின் குஹ்யார்த்தமாக விளங்குவதால் இவள் "நவமுகத்தி"
ஆறுமுகத்தி -- முப்பத்திரண்டு ஆம்னாயங்களும் ஸமஷ்டியாகி ஷடாம்னாயங்களாகி அந்த ஷடாம்னாய தேவதைகளாகவும், ஷண்மத தேவதைகளாகவும் இருப்பதால் இவள் "ஆறுமுகத்தி"
சதுர்முகத்தி -- ரிக், யஜூர்,ஸாம, அதர்வணாதி சதுர் வேதங்களாக அனுக்ரஹிப்பதால் இவள் "சதுர்முகத்தி"
மால் முகத்தி-- புருஷ ஸ்வரூபத்தில் ஸ்ரீ மந் நாராயணரின் வடிவாகவும், ஷட்கூட வித்யையை மஹா விஷ்ணு உபாஸித்து கமலவாஶினியான மஹா லக்ஷ்மியை நேத்ரங்களாக அடைந்ததால் மஹாவிஷ்ணுவிற்க்கு "கமலாக்ஷணன்" எனும் நாமம் அதற்கு காரணியாக அமைந்ததால் இவள் "மால்முகத்தி"
அருணமுகத்தி -- "ஸிந்தூராருண விக்ரஹாம்" எனும்படியும் , மஹா ஷோடஷி மந்த்ரார்த்தமாக விளங்குவதால் இவள் "அருணமுகத்தி"
அம்பரத்தி -- பராகஶத்திலே சித்ஸ்வரூபமாக நாமரூபவிவர்ஜிதையாக அக்ஷரங்களின் விமர்சமாக மந்த்ர ஸப்தங்களாக த்வனிப்பதால் இவள் "அம்பரத்தி"
பஞ்சாக்ஷரத்தி -- பஞ்சாக்ஷர மந்த்ர ஸ்வரூபமாகவும், அந்த பஞ்சாக்ஷர மந்த்ரத்தினுள் பஞ்ச ரஹஸ்ய தேவதைகளாக இருப்பதால் இவள் "பஞ்சாக்ஷரத்தி"
பரிபுரத்தி -- ஸ்ரீ வித்யா மந்த்ர பேதங்களில் ஸித்தயாமள ஷோடஷி வித்யையாகவும், பூர்த்தி வித்யையாகவும் அதன் மந்த்ர பேதங்களாகவும் விளங்குவதால் இவள் "பரிபுரத்தி"
பாசாங்குசத்தி -- அங்குச பாசங்களை தாங்கி புவனேச்வரீயாகவும், பாசாங்குச விமர்ச தேவதைகளாக "ஸ்ரீ அஸ்வாரூடா, ஸ்ரீ ஸம்பத்கரீ" ஸ்வரூபத்தில் இருப்பதால் இவள் "பாசாங்குசத்தி"
நடுவனத்தி -- ஆரண்ய வித்யையாக, மஹா வித்யையாக ஸ்ரீ வநதுர்காம்பாளாக இருப்பதால் இவள் "நடுவனத்தி"
பதுமாசனத்தி -- இருகால்களையும் இறுக்கி மடித்து மஹாயோக நிலையில் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிணியாக "ஸ்ரீ காமாக்ஷி" எனும் நாமத்தோடு கஞ்சிகாபுரீயில் ஸ்தானம் கொண்டதாலும், மாத்ரூகா ஸரஸ்வதி ஸ்வரூபத்தோடு இருப்பதால் இவள் "பதுமாசனத்தி"
சிவபுரத்தி -- சிவபுரமெனும் ஹாலாஸ்ய க்ஷேத்ரத்தில் த்வாதஶாந்த மஹா வித்யா ஸ்வரூபத்தில் "ஸ்ரீ மீனாக்ஷி" எனும் நாமதேயத்தோடு சிவக்ஞானமான ஶாம்பவ நிலையை ஸாதகர்களுக்கு அனுக்ரஹிப்பதால் இவள் "சிவபுரத்தி"
பாரத்தனத்தி -- ஸூர்ய, சந்த்ர மண்டலங்களையே ஸ்தனங்களாக கொண்டு ஸகல தேவதைவாதியர்களுக்கும் "ஸ்ரீ மாதா" எனும்படி மாத்ரூகா ஸ்தானத்தில் விளங்குவதால் இவள் "பாரத்தனத்தி"
திரிகுணத்தி -- ஸத்வம், ரஜஸ், தாமஸம், எனும் த்ரிகுணங்களாகவும் அதற்கு அதிஷ்டாத்ரியாக "சண்டிகா" எனும் நாமத்தோடு இருப்பதால் இவள் "த்ரிகுணத்தி"
கஞ்ச முகத்தி --சந்த்ரனின் காந்தியைப்போல முகமண்டலத்தை கொண்டவளானதால் இவள் "கஞ்சமுகத்தி"
கற்பகத்தி -- உபாஸிப்பவர்களுக்கும், பக்தர்களுக்கும் கற்பகத்தருவை போல அனுக்ரஹம் செய்வதால் இவள் "கற்பகத்தி"
கருணாகரத்தி -- கருணாரஶ ஶாகரா, கருணாம்ருத ஶாகரா என ஸஹஸ்ரநாமாதி,த்ரிஸதீ வாக்யங்களின் படி கருணையே வடிவானதால் இவள் "கருணாகரத்தி"
தவகுணத்தி -- ஶிவசக்த்யாதி மிதுனங்களாகி தன்னைதானே உபாஸித்து தபம் புரிவதால் இவள் "தவகுணத்தி"
"கயிலாசனத்தி" -- கைலாசத்தில் ஸ்ரீ ஸாம்ப ஸதாஶிவனாராகவும் அவரது ஸக்தி ஸ்ரீ மந் மனோன்மனீயாகவும் இருப்பதாலும், பல ஸ்தானங்களில் கைலாயத்தையும் அதில் ஒரு ஸ்தானமாக விளங்குவதால் இவள் "கயிலாசனத்தி"
நவகுணத்தி -- நவகுணங்களாகவும், நவஶக்திகளாகவும், நவவிதமான யோகினிகளாகவும் இருப்பதால் இவள் "நவகுணத்தி"
சதுர்கரத்தி -- "சதுர் பாஹூ ஸம்விதா" எனும்படியாக சதுர்கரங்களை கொண்டவளும் அதில் க்ரோதம், பாசம், மனஸ், பஞ்சதந்மாத்ரைகளையும் ஸங்கேதமாக அங்கு பாச இக்ஷூகோதண்ட பஞ்சபாணாதி அஸ்த்ரங்களை தாங்கியதால் இவள் "சதுர்கரத்தி"
மஞ்சு நிறத்தி -- ஸுத்த வித்யா ஸ்வரூபமானவளும், ரக்த, ஸுக்ல மிச்ர சரணங்களை கொண்டதால் இவள் "மஞ்சு நிறத்தி"
பரம்பரத்தி -- திவ்யெளக, ஸித்தெளக, மானெளக, பரொளக, அபரொளக, பராபரொளக குருமண்டலாதி பரம்பரைகளால் ஆத்மவித்யையாக உபாஸிக்கப்படுவதால் இவள் "பரம்பரத்தி"
மதுரச்சிவத்தி -- கோடிஸூர்ய ப்ரஹாஸத்தோடு கூடிய சிவந்த திருமேனியை உடையதாளும், ஸ்ரீ வித்யா மந்த்ர விமர்ஶமாக இருப்பதால் இவள் "மதுரச்சிவத்தி"
மங்களத்தி -- "ஸர்வமங்களா" எனும் த்ரிஸதீ வாக்யப்படி மஹா மங்கள வடிவானவளும், ஷடன்வய ஶாம்பவீ வித்யையாகவும், ஸாதகனுடைய த்வாதஸாந்தத்தில் குருபாதுகா ஸ்வரூபத்தில் ப்ரஹாஸிப்பதால் இவள் "மங்களத்தி"
இவ்வளவு மஹத்வம் வாய்ந்த
ஸ்ரீ யந்த்ர நாயகியான ஸ்ரீ மத் அபயப்ரதாம்பாளின் திருவடிகளையே சரணடைவோம்
ஜய ஜகதம்ப ஸிவே
ஜய ஜய காமாக்ஷி