ஆத்ம ஞானம் தொடர்
அருள் தரும் ஆனந்த திவ்ய யோகம் தரும் பில்லூர் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அருளினால் தினம் தோறும் நிகழும் ஞான யோக பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு பூரண நலன் பெற அன்னையை வேண்டி நிற்கின்றோம் . யோக அருளினால் ஆத்ம ஞான தொடர் எனும் ஞான நூலினில் வருகின்ற ஞான சிந்தனையில் தன் உணர்வு பூர்வமாக உள்ளார்த்த ஜீவ வெளி கொணர பில்லூர் பாலா ஞான பீடம் அன்னைஸ்ரீ பாலா துணை நிற்கின்றாள் . ஸ்ரீ ஆதிசக்தி ஆனவள் இந்த லோகத்தை படைத்தது அதில் பல்லாயிக்கணக்கான ஜீவா ராசிகளான உயிரினங்களை படைத்து அதனை காத்து ரட்சிக்கும் போது அவள் படைத்த அனைத்து உயிரினங்களையும் அவளின் குழந்தையாகவே அவள் பாவிக்கின்றாள். இந்த நிலையில் அன்னை ஸ்ரீ ஆதி ஷக்தி ஆனவள் அணைத்து ஜீவ ராசிகளையும் அடக்கி ஆளும் மகா சக்தியாக இருக்கின்றாள் . பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஈஸ்வரன் தேவி வீற்றிருக்கும் ஆசனத்தில் கால்களாக விளங்கி.சதாசிவன் அப்படியே தேவி அமர்ந்திருக்கும் உயர்ந்த ஆசனத்தில் மஞ்சள் விரிப்பு பலகையாக இருக்கின்றார் . இவர்களையே ஆசனமாக கொண்ட ஆசனத்தில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு இந்த லோகத்தை படைத்தது காத்து இந்த லோகத்தை படைப்பதைக்கான சங்கல்பத்தோடு தேவி அன்னை ஸ்ரீ பரமேஸ்வரி மகா பாரா ஷக்தியானவள் ஸ்ரீ திரிபுர சுந்தரியானவள் பரப்பிரம்மத்தோடு வீற்றிருக்கிறாள்.
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடை பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு
தாயும்
மகளும் நல் தாரமும் ஆமே
உலக காரணியே ஆதி ஷக்தி ,
பிரம்மன் திருமால் , ருத்திரன் மகேஸ்வரன் சதாசிவவன் இந்த ஐவரும் தனது சக்திக்காக ஸ்ரீ ஆதி ஷக்தி தேவியை வழிபட்டு தனது சக்தியை பெற்றிருக்கிறார்கள் என்னது மகா நியதி.
காணும் பலப்பல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலப்பல பொன்போல தோன்றிடும்
பேணும் சிவனும் பிரம்மனும் மாயனும்
காணும் தலைவி நற்காரணி கனே
ஆம் அயன் மால் அரண் ஈசன் சதாசிவன்
தாம்அடி சூழ் நின்றெய்தினர் தம்தம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வெண்தடி சூட நின்றாளே .
உலகிற்கு முதல்வராம் அயன்(பிரம்மா),திருமால் ,ருத்திரன் , மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐவர் தாமும் ஆதி சக்தி தேவியை வணங்கி வழிபட்டே தங்கள் பதவியை பெற்றார்கள் . காமன் ,சாமன் ,சூரியன் , அங்கி,சந்திரன்,என்னும் இவர்களும் அன்னை ஸ்ரீ ஆதி சக்தியை வணங்கி அவர்கள் சக்தியை பெற்றிருக்கின்றார்கள் .
நன்றி.....
தொடரும் ..................
பில்லூர்
ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடம்
9500450619