💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

தேவி பாகவதம் சிறப்பு பார்வை பில்லூர் ஶ்ரீ பாலா ஞான பீடம்

  



    அகிலமெல்லாம் காக்கும் நாயகி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரையினுடைய அருள் ஆசியோடு இந்த மகா சிந்தனையானது அனைவருடைய ஞான சிந்தனையும் அருள் சிந்தனையும் உயர்த்துவதற்காக இந்த மகா ஞானபீடம் ஆத்ம ஞான எனும் தொடர் அனைவருடைய சிந்தனையை உயர்ந்த எண்ணமாக உயர்த்துவதற்கு ஞான சிந்தனை உறுதுணையாக இருக்கின்றது.

 


இன்றைய மகா சிந்தனையிலே தேவி பாகவதம்  என்ற மகா சிந்தனை நாம் சிந்திக்க இருக்கின்றோம் நான்கு கைகள் உடையவளே சிரசில் சந்திர கலையை தரித்தவளே உன்னதஸ்தனம் உள்ளவளே குங்குமத்தால் சிவந்தவளே நாம கரும்பு பாசம் அங்குசம் புஷ்ப பானம் இவைகளை கரத்தில் ஏந்தியவளே ஜகத்தின் தாயே உனக்கு நமஸ்காரம் நான்கு திருகரங்களுடைய அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆக இருக்கக்கூடியவள் சிரசில் சந்திரனை தரித்து உன்னதஸ்தனம் உடைய குங்குமத்தால் சிவந்த நிறமுடையவாளாக இருக்கின்றாள். ஒரு கரத்திலே நாம கரும்பும் பாசம் அங்குசம் புஷ்பவனம் மற்ற கிரங்களிலே ஏந்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆனவள் அனைவருடைய இந்த மகா திரிபுரசுந்தரி ஆனவள் காத்து ரட்சிக்க கூடியவளாக இருக்கின்றாள்,

 


    இந்த லோகத்தை படைக்கும் பிரம்மாவிற்கு தேவதைகளாகவும்
, பரிபாலனை செய்யக்கூடிய விஷ்ணுவிற்கு தேவதைகளாகவும் அளிக்கும் காலக்ணி  ருத்திரனுக்கு அதிதேவதைகளாகவும் இருக்கின்றாரள், நாதம் பிந்து கலை வைகரி  வைகரி என்று சொல்லக்கூடிய இந்த நான்கு கலைகளையும்  உணர்த்துகின்றாள் படைக்கும் காலத்தில் சரஸ்வதி ஆகவும் பரிபாலான காலத்தில் மகாலட்சுமியாகவும் அழிக்கின்ற காலத்தில் மகா துர்கை ஆகவும் விளங்குகின்றாள், அன்னை பராசக்தியாக விளங்கக்கூடிய அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி பிரம்மா விஷ்ணு ருத்ரன் இவர்கள் மூன்றும் பேரும் தம் தம் தொழிலை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகினுடைய பராசக்தியாக இருக்கக்கூடிய ஜெகதீஸ்வரி என்னுடைய ஏவலின் பெயரில் செய்கின்றார்கள் 
 மோக்ஷம் என்பது இன்றியமையாமையாக இருக்க இந்த நாதம் பிந்து கலை வைகரி இதைத் தழுவி பத்தியமா வைகரி என்று சொல்லக்கூடியவை அமைகின்றது நாதசுரவினியாக பரைஎன்ற சக்தியானவள் மூலாதார சக்கரத்தில் இருந்து ஜோதி ஸ்வருபமாக விளங்குகின்றாள்.


 

 இந்த பஷயந்தி என்ற பரதேவதையானவள் ஹிருதியாகாசத்தில் ஓங்கார ஸ்வருபமாக விளங்குகின்றாள்.
 கலை என்ற மத்தியமா தேவியானவள்  விசுக்தி சக்கரத்தில் அகாரம் முதலான சுரங்களாகவும் கஹாரம் முதலான ஸ்பர்சங்களாகவும் ஆகவும் சித்த ஸ்வர்ண சுரபி விளங்குகின்றாள். வைகிரி என்ற பரதேவதை  வாக்ரூபிணியாக ஒவ்வொரு பொருளையும் விளக்கி வைக்கின்ற ஒளிமயமாக விளங்கி வருகின்றாள்.மூலாதாரத்திலோ நாதஸ்வரபினியாக இருக்கின்ற தேவியானவள் தன்னை வழிபடுபவருக்கு ஏனையவர்களுக்கு புலப்படாமல் சொர்க்கமாக விளங்குகின்றாள்.  ஸ்ருதிஹாசத்தில் ஓங்கார சுரூபிணியாக இருக்கும் தேவியானவள் வழிபடுபவர்களுக்கு மாத்திரம்  ஒருஷணம் மின்னல் கொடி போல வருகின்றாரள்.  விசுத்தி சக்கரத்தில் சுத்தசுவர்ண சுரூபிணியாக மத்தியமா என்ற அவசத்திலோ  அக்னிஸ்வாலை போல தீர்க்கமாய் வழிபடுவோருக்கு விளங்கி வருகின்றாள்.


 

 வைகரி என்ற சக்தியானவள் அக்ஷய தேசத்தில் சப்த ரூபமாக விளங்கி வருகின்ற வழிபடுபவர்களுக்கு மற்றவர்களுக்கும் விளங்கி வருகின்றாள்..
சரஸ்வதி லட்சுமி துர்க்கை என்ற சக்தியோடு புனித வேதாந்த மகா பாக்கிய ஜென்மயமான அகண்டாகார விரக்தி நர நாராயணன் அவதாரம் செய்த மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனன் ஆகிய பாகவதோத்மனையும் வணங்கிவிட்டு வாவ் தேவதனுடைய திருவருளை பெறுவதற்காக பரதேவதையும்  வணங்கி  வருகின்றாள் அப்பால் சகல புராணங்களுக்கும் முக்கிய கதர் தாவாக இருக்கக்கூடிய சர்வ ஞானம் ஆக இருக்கக்கூடிய மகாவிஷ்ணு சுலபமாக இருக்கக்கூடிய வேதவியாசரை வணங்கி தேவி பாகவதம் என்ற கருத்தை சொல்ல வேண்டும் என்ற நியமமாக இருக்கின்றது ஜெயந்தி அன்னைகேஸ்புரம் என்று சொல்லக்கூடிய இந்த ஸ்லோகத்திலே ஜெயம் என்ற சப்தத்தால் சகல லோகங்களையும் ஜெயிக்க சக்தியை கொடுக்கக்கூடிய அநேக ரகசியமான மந்திரங்களால் அலங்கரிக்கப்படும் காரணத்தினால் இந்த கிரந்தைக்குள்ளே ஜெயம் என்ற திருநாமமானது விளங்கி வருகின்றது.






தொடரும் ....................



   நன்றி 

ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம் 
பில்லூர் 

9500450619

Previous Post Next Post