💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

தேவி பாகவதத்தின் மகிமை


தேவி பாகவதத்தின் மகிமை 


        அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ மகா பராசக்தி ஆனந்த ஸ்ரீ மகா திரிபுரசுந்தரியினுடைய பில்லூர் ஸ்ரீ  பாலா ஞான பீடத்தில் அனுதினமும் நிகழ்த்தக்கூடிய இந்த ஞான பூஜையில் ஞான சிந்தனையிலே அனைவரும் தன்னுடைய சிந்தை பெறுவதற்கும்  தன்னுடைய சிந்தை ஏற்றத்திற்கும் நேர்மறையான சிந்தனை தன்னுடைய ஒருமுக சிந்தனையை உயர்த்தி கொள்ள   இந்த பில்லூர்  ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடத்தின் ஞான உபாசனை இன்றைய சிந்தனையில் தேவி பாகவதத்தினுடைய மகிமையைப் பற்றி நாம் சிந்தித்து வருகின்றோம் பரிஜித்து  மகாராஜாவின் புத்திரரான ஜனமேய மஹாராஜாவிடம் தேவி பாகவதத்தை பிரவசனம்  செய்து இருக்கின்றார்.

 மகாமுனிவரான தான் இந்த பரிஜித்து   மகாராஜாவிலும் இந்த ஜனமேய மகாராஜாவிடம் இந்த தேவி பாகவதத்தை பிரவசனம்  செய்கின்றார். எப்படி பிரவசனம் செய்கின்றார் அந்த சூழ்நிலை எப்படிப்பட்டது அதனுடைய நியதிகள் எல்லாம் எப்படிப்பட்டது என்பதை நாம் கடைபிடித்து வர வேண்டும் .  பரிஜித்து மகாராஜாவின் புத்திரரான ஜனமேய மகாராஜாவிடம் தேவிபாகவத்தை வியாச மகாமுனிவர் எப்படியெல்லாம் இந்த தேவிபாகவத்தை பிரவசனம் செய்தார் என்பதை நாம் சிந்தித்து வருகின்றோம்.

     தந்தை பரிஜித்து   மகாராஜா சர்ப்பம் தீண்டி மரணப்படுக்கையில் படுத்து இருக்கின்றார் அந்த மரணப்படுக்கையில் படுத்து இருக்கின்ற வேளையிலே அரசவைகள் எல்லாம் துன்ப நிலையில் இருக்கின்றன, மக்கள் எல்லாம் மகிழ்ச்சியில்லாமல் நாடுகள் செல்வ வளம் குன்றி  இருக்கின்றது ஏனென்றால் ராஜாவுக்கு உடல்நிலை குறைவு காரணமாக எந்தவித  இயக்கமும் இல்லாமல் இருக்கின்றது.

      துர் மரணம் ஏற்படும் துக்கம் வராமல் இருக்க  சாந்திக்கான விரும்பி வியாசர் பகவானை வேண்டி தேவி பாகவதத்தை கதாபிரத பானம் செய்ய வேண்டி நிற்கின்றார் மகாராஜாவிற்கு ஒன்பது நாட்களில் தேவி பாகவதத்தை பிரவசனம் செய்து வைக்கின்றார்.

 வியாச மகாமுனிவர் அந்த ஒன்பது நாளில் தினம் தோறும் அன்னை லோகமாதாவான பராசக்தி நவாபரண   விதியை அனுசரித்து பூஜை செய்து வர வேண்டும் என்பது நியதியை வைக்கின்றார் வியாச மகாமுனிவர்.

     தேவி பாகவதம் 18 புராணங்களில் மேன்மையாக இருக்கின்றது இந்த 18 புராணங்களிலே மேன்மையாக இருக்கக்கூடிய தேவி பாகவதம் என்ற புராணமானது அதை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகினுடைய பூரணமான சக்தியை ஆற்றலையும் வெளிக்கொணரக்கூடிய மகிமையை தெளிவாக உணர்த்தி  தர்மம் அதர்த்தம்  காமம் மோட்சம் என்ற நான்கு நிலைகளையும் புருஷார்த நிலைகளையும் சில பல மாத்திரத்தால் காலதாமதம் இல்லாமல்  கிடைக்கவல்லது 

தர்மம் அதர்த்தம்   காமம் மோட்சம் என்றால் என்ன தர்மம் நாம் செய்யக்கூடிய புண்ணியம் அதர்த்தம் இதுபோன்று காமம் மோட்சம் என்ற நான்கு பிரசாத்தங்களையும் நாம் அடையக்கூடிய   காலதாமதம் இல்லாமல் அடைய காலதாமதம் இல்லாமல் அடைவதற்கு இந்த தேவி பாகவதம் என்ற நூல் பெரும் உதவியாக இருக்கின்றது சமஸ்தானமான சித்திகளையும் கிடைக்கக் கூடிய வல்லது சமஸ்தானம் சமஸ்தான சித்திகளும் பூரண சக்திகளும் கிடைக்க கைக்கூடும்.

 ஒரு நாளாவது அரைநாளாவது கால் நாளாவது ஒரு முகூர்த்தமாவது ஒரு ஷனம் ஆவது அதாவது ஒரு வினாடியாவது குடும்பத்தில் தேவி பாகவதத்தை பாராயணம் செய்தால் அல்லது கேட்டாலோ எந்தவித துன்பமும் வராது என்பது நியதி.

     இந்த தேவி பாரதத்தை எப்ப எல்லாம் பாராயணம் செய்யலாம் எப்பலாம் கேட்கலாம்  சிந்தித்தால் ஐப்பசி சித்திரை மாசி ஆடி இந்த நான்கு மாதங்களில் பாராயணம் செய்ய வேண்டும் என்பதை விதிகளும் நியதிகளும் இருக்கின்றது ஐப்பசி சித்திரை மாசி ஆடி இந்த நான்கு மாதங்களில் பாராயணம் செய்ய வேண்டும் இந்த நான்கு மாதங்களை வைத்து தான் சொல்லி நான்கு நவராத்திரிகள்  சாரதா நவராத்திரி வசந்த நவராத்திரி மகா நவராத்திரி ஆஷாவுடன் நவராத்திரி ஒவ்வொரு மாசத்துலயும் வரும் இல்லையா இந்த  நவராத்திரி ஐப்பசி மாதத்திலும் ஒரு நவராத்திரி சித்திரை மாசத்துல மாசி மாசம் நவராத்திரிகள் கொண்டாடும் ஒவ்வொரு நவராத்திரிகளும் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆக இருக்கக்கூடிய திரிபுரசுந்தரிக்கு சிறந்த சிறப்பாக மகா பூசைகளும் அணையின் உடைய அபிஷேக ஆராதனை என்பது சிறப்பாக நடைபெறும் இந்த மகா சிந்தனையிலே தன்னுடைய உயர்ந்த நிலைக்கு அடைவதற்காக பூரண நலன் பெறுவதற்காக இந்த பில்லூர் ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞானபீடத்தில் இந்த மகா சிவராத்திரியில் இந்த மகா நவராத்திரியில் செய்யக்கூடிய பூஜையில் அனைவரும் பூரணமாக கலந்து கொண்டு ஆனந்த சித்தியை அடைய வேண்டும் .  

    அன்னைக்கு இந்த நவராத்திரிகள் என்னென்ன எல்லாம் செய்து இருக்கிறோம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டும் ஆராதனைகளை எப்படி செய்ய வேண்டும் இரண மந்திரங்கள் கூற வேண்டும் எப்படியெல்லாம் தியானம் செய்ய வேண்டும் தன்னுடைய ஒரு முகமாக இருக்கக்கூடிய சிந்தனையை எப்படி உயர்த்த வேண்டும் என்பதை இந்த மகா ஞானபீடம் மாற்றுகின்றது கன்னி ராசி ஏதாவது சூரியன் என்பது புரட்டாசி மாதத்தில் இருக்கும் புரட்டாசி மாதத்தில் இருக்கக்கூடிய கால வேலையிலே அமாவாசைக்கு பின்பு இந்த சுக்கில் பக்ச அஷ்டமில தேவி பாவகத்தை தேவி பாகவதத்தை ஸ்வர்ண சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து தேவி பாகவதந்த ரகசியத்தை பிறருக்கு பாராயணம் செய்தாலோ இந்த தேவி சிம்மாசனம் அருளினாலே தேவி சாகித்தியத்தை அடையலாம் 14 உலகத்திற்கும் அன்னையாக இருக்கக்கூடிய பராசக்தி ஜெகத்தின் உற்பத்திக்கும் முன்னும்    பின்னும் பிரளைய காலத்தில் பின்னும் மூன்று காலங்களையும் பிரம்மாவாக இருக்கக்கூடியவளாக இருக்கின்றாள். அவளை காக்கக்கூடியவள் அளிக்கக் கூடியவள் அவளை ஆக்கக் கூடியவளாக இருக்கின்றான் அகத்தின் உற்பத்திக்கும் என்று சொல்லும் பொழுது அவளே பிரம்மாவாகவும் இருக்கின்றாள் அப்போ அவள் ஆக்கக்கூடிய சக்திகளை கொண்டுள்ளாள், அதுமட்டுமல்ல பிரளய  காலத்திற்குப் பின்னும் மூன்று காலத்திற்கும் சொல்றாங்க பாருங்க ஆக்கக்கூடிய சக்தி என்பது பிரம்மாண்ட நாயகியாக இருக்கக்கூடிய பராசக்தியின் உடைய சக்தி அகல உலகங்களுக்கு எல்லாம் ஆக்கக்கூடிய சக்தியாக இருக்கின்றவள் இதே சக்தியானவள் அகில உலகங்களுக்கு எல்லாம் காக்கும் சக்தியாக இருக்கின்றாள் இந்த 14 லோகங்களுக்கும் 14 உலகங்களுக்கு எல்லாம் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி காக்கும் நாயகியாக இருக்கின்றாள், அதுமட்டுமல்ல அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி இந்த 14 லோகங்களுக்கும் அளிக்கும் நாயகியாக இருந்து ஆற்றல் மிக்க சக்தியாகவும் இருக்கின்றாள். அன்னையே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஆக்கின்றாள் காக்கின்றாள் அழுகின்றாள் 

     ஆக்குவதலம் அவளே காப்பவளும் அவளை அழிப்பவளும் அவளே மூன்று விதமான சக்திகளும் ஒருமுகமாக கொண்டு அந்த ஏவலின் பெயரில் என்று சொல்கின்றாள். தன்னுடைய சக்திகள் எல்லாம் ஒரு முகமாக ஒன்றாக வைத்துக் கொண்டு தன்னுடைய பிற சக்திகளிடையே தன்னுடைய தேவரின் பெயரில் ஒவ்வொரு தொழிலையும் செய்கின்றாள் படைக்கும் தொழிலை பிரம்மாவிற்கும் காக்கும் தொழிலை விஷ்ணுவிற்கும் அழிக்கும் தொழிலை ருத்ரனுக்கு கொடுத்து பட்டத்து   ராணியாக ராஜராஜேஸ்வரி ஆக அமர்ந்திருக்கின்றாள்.

 சச்சிதானந்த ரூபிணி இந்த லோகத்தை ஆட்டி வைக்கின்ற மாயையை தன் வசத்தில் கட்டுக்குள் வைத்திருப்பவள் மாயையை என்று சொல்லுகின்றார் தீய சக்திகளை எல்லாம் தன்னுடைய கட்டுக்குள் வைத்து முழுமையாக கூடியவள்   அழிக்க கூடியவன்  சகல உலகங்களிலும் வியாபித்து இருப்பவள் ஸ்தாபித்து இருப்பவள் சொல்கின்றன சகல உலகங்களுக்கும் பறந்து விரிந்து பரதேவதையாக இருக்கக்கூடியவள் அகண்டதார விருத்தியாக வித்யா தத்துவினியாக விளங்கி வருகின்றாள் ஈஸ்வரனுக்கு ஈஸ்வரியாக அவள் விளங்கி வருகின்றாள்.


தொடரும் ..........


நன்றி ...


ஸ்ரீ பில்லூர் பாலா ஞான பீடம்

கும்பகோணம்   to  திருநள்ளார் சாலை 

பில்லூர் 

9500450619


Previous Post Next Post