💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

அன்னை ஆதிசக்தியே ஆதி தோற்றம் பாகம் 3

ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

 அன்னை ஸ்ரீ ஆதி சக்தி பாலா திரிபுர சுந்தரியின் அருளாசியுடன் வழங்கும்

 ஆத்ம ஞான மலர்

   ஞான தொடர்... பாகம் 3




அன்னை ஆதி சக்தியின் அருளாசியோடு சக்தியினாலே இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவ சந்துக்களும் , ஜீவ பொருள் மற்றும் அனைத்து உயிர் அணுக்களும் இயங்குகிறது என்பது ஞான சித்தர்களின் கூற்று. நாம் எண்ணிக்கொண்டு இருப்பது உயிர் அணுக்கள் என்பது அசைவுடன் கொடிய உயிர் அணுக்களையே, அது மட்டும் அல்ல மேலும் சக்தி உடைய அனைத்து ஜீவ சத் பொருளும் உயிருள்ள ஜீவ ராசியாக கருதப்படும். நாம் சக்தி,சிவம் என்ற கூற்றாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆக சிவம் என்பது என்ன , சக்தி  என்பது என்ன , ஒரு உயிர் அணுவில் ஆற்றலை விளங்குவது சக்தி, அந்த ஆற்றல் அடங்கியுள்ள ஆதார பொருளான சத்து பொருளாக இருப்பது சிவம். ஆக ஆற்றலான சக்தியும் சிவம் என்ற சத்து பொருளும் இணைந்தே இருப்பதால்
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
என்று ஆன்மிக ஞானிகள் கூற்றை நாம் அனைவரும் அறிந்ததே.
சக்தியாலே சிவம் இயங்குகிறது,
சக்தி பிரிந்திடில் சிவம் இயங்காது .

சிவமெனும் பொருளும் ஆதிசக்தியோடு
சேரின் எத்தொழிலும் வல்லதாகும்
இவள் பிரிந்திடில் இயங்கு தற்குமரி
அரிதென்னமறை இரைக்குமால்
ஒரு பொருள் அல்லது ஒரு ஜீவன் இயங்குவதற்கு சக்தி என்ற ஆற்றல் அவசியமாகின்றது. நாம் இன்றயமையாக கவனிக்க வேண்டிவை என்னவென்றால் சக்தி என்ற ஆற்றல் நாம் கண்களால் காண இயலாது. ஆற்றல் என்ற சக்தி நிறைத்த பொருளான சத்து பொருளான ஒரு ரூபமாக, ஒரு உருவமாக நாம் காண முடியும்.நாம் ஒரு அழகிய மற்றும் மணம் கொண்ட மலரினை சற்றே சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், நாம் கண்களால் காண்பது அழகிய மலர் உருவத்தையே , அனல் அதில் அடங்கியுள்ள ஆற்றலான நறுமணத்தை நாம் வேறு கண்களால் காண இயலாது,நாம் நாசியின் வழியாக மலரின் சக்தி எனும் ஆற்றலான நறுமணத்தை உணர முடியும். நன்கு மலர்ந்த நறுமணம் உடைய மலரினை மட்டுமே பயன்படுவோம். அந்த மலரினுள்ள நறுமணம் சென்ற பின் அது ஒரு வெற்று பொருளாக கருதப்படும்.சக்தி என்ற ஆற்றல் இல்லாத பொருள் பயனற்ற பொருளாகவே கருதப்படும்.மலர் மட்டுமல்ல மேலும் தேன் மற்றும் தான்ய வகையை எடுத்துக்கொள்வோம். இந்த தானியத்தில் ஆற்றல் இருக்கும்வரை மரு  சுழற்சியாக பல்வேறு வகையில் பல்வேறு பயன்பாட்டில் பல ஜீவன்களுக்கு பயன்படும். இறுதியாக அதன் ஆற்றல் இல்லாத தருணத்தில் ஒரு பயனற்ற பொருளாக இருக்கும். இதிலிருந்து நாம் சிந்தனையில் எடுத்துக்கொண்டு நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி ஒரு ஆற்றல் என்ற சக்தியை தனித்தே வைக்கமுடியாது, ஒரு ஆற்றல் ஆனது ஒரு சவ பொருள் என்ற ஆதார பொருள் இல்லாமல் தனித்து இயங்காது.சக்தியின் இயக்கத்திற்கு ஒரு சவ பொருள் அவசியமாகவும் இன்றியமையாததாகவும் இருக்கின்றது.அதே போல் ஒரு சவ பொருளின் இயக்கத்திற்கு சக்தி என்பது இன்றியமையாததாக இருக்கும். சக்தி இல்லை என்றால் ஒரு சவ பொருள் இயக்க நிலை இல்லாமல் ஒரு வெற்று பொருளாக கருதப்படும். இதிலிருந்து

சக்தி இல்லையேல் சிவம் இல்லை
சிவம் இல்லையேல் சக்தி இல்லை
என்பது புலப்படும்.

ஒரு ஜீவ உடலான  அதாவது அந்த சவ பொருள் எங்கே உருவானது ?
ஒரு ஜீவ ஆற்றல் எங்கே உருவானது ?
இறுதியில் ஆற்றலை இழந்த சவ பொருள் எங்கே போகிறது ?
சவ பொருளை இழந்த ஆற்றல் எங்கே போகிறது ?

தங்களின் கருத்தை கூறவும் .

ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்

நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்
Previous Post Next Post