💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

பேசும் எழுத்தும் பேசா எழுத்தும்




அருளே வடிவமாகவும் ஞானமே சொருபமாகவும் வீற்றிருக்கும் அன்னை ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ ஆதி சக்தியின் அருளாசியோடு குழந்தை வடிவமாக வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாவின் துணையினாலும்


ஆத்ம ஞான மலர் ( ATHMA GNANA MALAR ) எனும் ஞான தொடர்

பேசும் எழுத்தும் பேசா எழுத்தும்

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும்
நாலெழுத்தும் எட்டெழுத்து பிஞ்செழுத்தும்  மேலைப்
பெருவெழுத்தும், நெஞ்சழுத்தி பேசும்
எழுத்தினை பேசா எழுதினையும் கூசாமற்
கட்டாக் கோடி


அஞ்செழுத்து     -    சிவாயநம
எட்டெழுத்து       -     ஓம் ஆம் ஒளம் சிவாயநம
நாலெழுத்து        -    ஓம் சிவாய
பிஞ்செழுத்து      -  வ காரமாகிய   ஸ்ரீ ஆதிசக்தி (பேசும் எழுத்து )
பெருவெழுத்து    -   சி காரமாகிய  சிவம் (பேசா எழுத்து     )

இவற்றை முறையாக உச்சரித்து இத்தியத்தில் வைக்கவேண்டும்.
அஞ்செழுத்து முதலாகிய மந்திரங்களை உச்சரித்து பிறகு அந்த மந்திரங்களின் எழுத்து உருவத்தினை அறிந்து மனதில் நிறுத்த வேண்டும். மந்திரத்தினை உச்சரிக்கும் முன் எழுத்து உருவத்தினை நம் கண்களால் உற்று நோக்க வேண்டும் .நம் கண்களால் மந்திரத்த்தினை உற்று நோக்கி மந்திரத்தின் எழுத்தது உருவத்தினை ஏற்றி நெஞ்ச்கத்தில் இருத்தி வைக்க வேண்டும். நெஞ்சகத்தில் இருத்தி வைக்கப்பட்ட மந்திரத்தை உச்சரித்து அல்லது மன அகத்தில்  உச்சரித்து உள்ளார்ந்த தியானம் செய்ய வேண்டும் .
கண்களை மூடிக்கொண்டு அகதியானமாக நேஞ்கத்தில் இருத்திய மந்திரத்தை ஞான உருவாக மன அகத்தில் உச்சரிக்கும் போது நெஞ்சகத்தில் இருத்தி வைக்கப்பட்ட மந்திர உரு நினைவாக எண்ணத்தில் தோன்றும் என்பது ஞானிகளின் கூற்று.  

சிகாரம் எனும் சிவம், வகாரம் எனும் சக்தி ய காரம் எனும் ஞானம்.

சி  -  சிவம்
வ -    சக்தி
ய -   ஆன்மா
தொடரும் .....

ஆசிரியர் - இராமலிங்க வேல்விழிநாதன்
நன்றி
ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

Previous Post Next Post