பில்லூர் ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ பாலா அருளினால் ஸ்ரீ மகா குரு ஆசியினுளும் ஆத்ம ஞானம் எனும் தொடர் ஞான உபதேசம் அருளப்படுகின்றது தொடர்பிற்கு 709290619,90040619
ஆசிரியர் இரா.வேல்விழிநாதன்
ஆதிசங்கரர் அருளிய
சௌந்தர்ய லஹரி என்னும் நூலிலே 100 ஸ்லோகங்களில் ஸ்ரீவித்யா உபாசனை பற்றி வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஸ்லோகமும் அம்பிகையினுடைய பெருமையை பலவாறாக வர்ணித்து அவளை பூஜிக்க வேண்டிய கிரமங்களை விளக்கி அதனால் கிடைக்கக்கூடிய பலன்களையும் விளக்கி இருக்கின்றார். பலன்களை அடையக்கூடிய சில பிரயோகங்கள் கூறப்பட்டிருக்கின்றது. மகான்களிடம் ஸ்ரீவித்யா மந்திர உபதேசம் அல்லது தீட்சை பெற்றவர்களே சௌந்தர்ய லஹரி சொல்லப்படுகின்ற இந்த பிரயோகத்திற்கு அதிகாரம் சிந்திக்க கூடிய நினைக்கக்கூடிய எண்ணங்கள் ஏற்படுகின்றது. ஸ்லோகங்கள் பாராயணத்திற்கு மந்திர தீட்சை வேண்டும் என்கின்ற அவசியமில்லை பராசக்தியின் மனதில் தியானம் செய்து கொண்டு பாராயணம் செய்யலாம் இப்படி சௌந்தர்ய லஹரி என்றால் அழகினுடைய அலை பெருக்கு என்று சொல்லப்படுகிறது.
முதல் 41 ஸ்லோகங்கள் தேவனுடைய இன்ப பெருக்கை கூறுவதால் அதனை ஆனந்த லகரி என்றும் 59 சுலோகங்கள் தேவனுடைய எழிலை கூறுவதால் சௌந்தர்ய லஹரி என்றும் கூறப்படுகின்றது. சக்தி வழிபாட்டில் மந்திரம் எந்திரம் தந்திரம் என்ற மூன்றையும் சக்தி முக்கோணத்தின் மூன்று மூலைகளாக கருதலாம் மந்திரத்தில் உள்ள கருத்தை உருவகப்படுத்தி காட்டுவது எந்திரம் அந்த சித்தந்தத்தை நிறுத்துவது கையாளப்படுத்துவது வெளிப்படையாக அதை பூஜை என்று சொல்கின்றோம் மானசீக பூஜை குண்டலினி யோகம் மற்ற சாதனம் எல்லாம் தந்திரத்தில் அடங்கக்கூடியது. மந்திரத்தில் உள்ள கருத்தை உருவாக்கப்படுத்துவது எந்திரம் அதில் சித்தா சித்தாந்தத்தை நிறுத்துவது கையாளப்படுகின்ற வெளிப்படையான பூஜை அப்படி குண்டலினி யோகம் அப்படி மற்றதெல்லாம் இந்த தந்திர சாஸ்திரத்திலே அடங்குகின்றது ஸ்ரீவித்யையில் மிக முக்கியமான பஞ்சதாக்ஷரியும், ஷோடசியும் 32 வது ஸ்லோகத்தில் இதை குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீ சக்கரம் பற்றி பதினோராவது ஸ்லோகத்தில் விவரமாக கூறப்பட்டிருக்கிறது முக்கியமாக தந்திரம் ஆகிய ஐக்யானு ஸந்தானம் என்பது 34 வது ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. ஆதிசங்கரர் அருளிய
சௌந்தர்ய லஹரி எனும் நூலை அனைவரும் அறிய வேண்டும். தேவியை வழிபட எல்லா வர்ணத்தாருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிச்சயமாக மனதில் உள்ள தன்னுடைய எண்ணங்களுடைய தியானத்தினால் பூரணமாக சித்தி அடைகின்றது.
விநாயகர் வணக்கம் மொழிந்த மரை நூல் ஏற்ற முகபடாமல் அணிந்து முதுஞான தானம் பொழிந்து தனது இணை மணி இரு சுடரும் புனை கலையற்றனை போற்றல் செய்யவாம் வழிந்து பெருபுனல் பறந்து வடவறையில் உலகெழும் ஏழும் ஒக்க அழிந்திடனும் அழியாத அபிராமி பாடல் வளம் அளிக்க அன்றே
யானை முகத்திற்கு முகபராம் என்ற அணிகலன் அணிவிப்பார்கள். இது அழகுக்காக என்பதாக ஒரு பக்கம் இருந்தாலும் மிகவும் முக்கியமாக ஞானக்கண் உள்ள இடம் புருவத்தினுடைய நடுவில் அப்படி யானை உடைய மஸ்தகம் மிகவும் மங்களகரமான வஸ்துக்களில் ஒன்றாக இருக்கின்றது எப்படி அருமையான கண்கள் இமைகள் பாதுகாக்கப்படுகின்றதோ அதுபோல இந்த அருமையான ஞானஸ்தானம் வேதங்களால் ஆன இந்த முகபடாமிலிருந்து மறைத்து பாதுகாக்கப்படுகின்றது என்று கூறலாம். உலகின் 14 முழுகினாலும் மறையாத புகழுடைய அம்பிகையின் உடைய புகழைப் பாட இக்கவி விநாயகருடைய அருளை கூறுகின்றார்.
தமிழில் சௌந்தர்யலகரியை இயற்றிய கவிராயர் தமிழ் நூல்களில் மரபுக்கேற்ப இந்த விநாயகர் வணக்கத்தை நூலில் இருந்து ஆரம்பிக்கின்றார். இறுதி இந்த மாதிரி விநாயகர் வணக்கம் ஏதும் நம் சமஸ்கிருதத்தில் இருக்கக்கூடிய சௌந்தர்யலகரியில் ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது.
பக்தி பொறுமை கருணை அஹிம்சை தாராளமனம் இவையெல்லாம் இருந்தால் ஏதும் வெற்றி பெறும் இந்த மனம் ஆத்ம குணத்திற்கு இருப்பிடமாக இருப்பவர்கள் தான் விநாயகர் என்று சொல்கின்றார் எதை செய்வதற்கும் முதலில் அதற்கான தகுதி இருக்க வேண்டும் நூல் எழுவது எழுதுவதற்கென்றால் பல புத்தகங்களை படித்து விஷயங்களை கிரகித்து எடுத்து விளக்கக்கூடிய ஆற்றல் வேண்டும் தச்சு வேலை செய்வதென்றால் அதற்கான கருவிகளை கையாளக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும் இதெல்லாம் சிறப்பு தகுதிகளாக எடுத்துக் கூறுகின்றது . இவையெல்லாம் பொதுவாக சொல்லப்படுகின்றது எப்படி என்றால் எதை செய்வதற்கும் முதலில் அதற்கான தகுதிகளை தன்னுடைய மனதிலும் உடல் ரீதியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது பக்தி பொறுமை கருணை அகிம்சை தாராளமனம் இவையெல்லாம் இருந்தால் தான் எதுவும் வெற்றி பெறக் கூடிய இந்த ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமாக இருக்கக்கூடிய விநாயகரை முதலில் வணங்க வேண்டும் என்று சொல்கின்றார் அவருடைய பெருவயிறு திருப்தியை காட்டுகின்றது. அவருடைய சிறு கண்கள் குற்றங்களை துருவி பார்க்காத தன்மையை காட்டுகின்றது அருகம்புல்லும் எருக்கம் பூவும் கொண்டு பூசிப்பது அவருடைய எளிமையை காட்டுகின்றது காது பெரிதாக இருப்பது அதிகம் கேட்டு அவைகள் உள்ள குணத்தை எடுத்துக் கொள்வதாக குறைகின்றது நான் என்ற அகங்காரம் நீங்க வேண்டும் என்பதை அங்குசம் காட்டுகின்றது. செய்யும் காரியம் ஏதும் அரைகுறையாக இல்லாமல் பூரணமாக இருக்க வேண்டும் என்பதை அவர் கையில் உள்ள மோதகம் காட்டுகின்றது.
யானை புத்தி கூர்மைக்கு பேர் போனது அது போல அதன் அறிவு ஞானத்தின் அறிகுறி இப்பேற்பட்ட தகுதிகள் ஒருவனுக்கு இருந்துவிடுமானால் அவன் மேற்கொள்ளக்கூடிய காரியம் ஒருநாளும் வீணாகாது என்பது என்பதற்காக முதன் முதலில் நாம் விநாயகரை வணங்குகின்றோம்

.jpg)